தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கைது செய்யப்படும்’ பிரதமர், முதல்வர்கள் தற்காலிக இடைநீக்கம் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை

12 Jul 2026, 9:19 pm
‘கைது செய்யப்படும்’ பிரதமர், முதல்வர்கள் தற்காலிக இடைநீக்கம் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை
<p><strong>‘கைது செய்யப்படும்’ பிரதமர், முதல்வர்கள் தற்காலிக இடைநீக்கம் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை</strong></p><p>கடுமையான குற்றச்சாட்டு களுக்காக 30 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்படும் பிர தமர், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் முத லமைச்சர்களைப் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்குப் பதிலாக, தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறி முகப்படுத்தப்பட்ட 130ஆவது அரசிய லமைப்புத் திருத்த மசோதா, பிரதமர், அமைச்சர்கள் அல்லது முதலமைச்சர் கள் 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந் தால், அவர்கள் தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள், “தங்களுக்கு எதிரான அரசுகளைக் கவிழ்க்கும் கருவி” என கடுமையாக விமர் சித்திருந்தன. இதனைத் தொடர்ந்து, இந்த மசோதாவை ஆய்வு செய்த நாடாளு மன்றக் கூட்டுக்குழு “நிரந்தர நீக்கம்” என்பதற்குப் பதிலாக “தற்காலிக இடை நீக்கம்” என்ற பரிந்துரையை தற்போது முன்வைத்துள்ளது. இந்த பரிந்துரை களை ஒன்றிய அமைச்சரவை ஏற்றுக் கொண்டால், உள்துறை அமைச்சகம் இது தொடர்பான திருத்தங்களை நாடா ளுமன்றத்தில் முன்வைக்கும். சிறையில் இருந்து கொண்டு நிர்வா கத்தை நடத்துவதைத் தடுக்கும் நோக் கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப் பட்டுள்ளது என மசோதா அறிமுகப் படுத்தப்பட்ட போது மோடி அரசு நாடாளு மன்றத்தில் விளக்கம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.