பிஎம் கேர்ஸ் நிதியில் ரூ.8,452 கோடி எந்த முதலாளியின் பையை நிரப்பத் திட்டம்?
19 Aug 2026, 8:30 pm

பிஎம் கேர்ஸ் நிதியில் ரூ.8,452 கோடி எந்த முதலாளியின் பையை நிரப்பத் திட்டம்?

புதுதில்லி2025 மார்ச் 31, நிலவரப்படி, பிஎம் கேர்ஸ் கணக்குகளில் ரூ.8,452 கோடி உள்ளது என தெரிய வந்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.480 கோடி நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட சுமார் 30% குறைவு என்று செவ்வாய்க்கிழமை(ஆகஸ்ட் 18, 2026) வெளியிடப்பட்ட 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கைகள் மூலம்தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் படி நன்கொடைகள் மற்றும் வைப்புத்தொகைக்கான வட்டி மூலமாக மொத்த வருமானம் முந்தைய ஆண்டை விட 41% அதிகரித்து ₹1,279.9 கோடியாக உயர்ந்துள்ளது. 2025 மார்ச் 31 இல் ரூ.87 லட்சம் செலவுசெய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 2022-23 க்குப் பிறகு ஆண்டறிக்கைகளை இணையதளத்தில் பாஜக அரசு பதிவேற்றம் செய்யவில்லை. தற்போது இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று பரவிய காலத்தில் அவசரநிலை மற்றும் பேரிடர்களை எதிர் கொள்வதற்காக 2020 மார்ச் மாதம் பிஎம்கேர்ஸ் நிதியம் உருவாக்கப்பட்டு முதல் வாரத்தில் ரூ.3,000 கோடியும், மூன்று ஆண்டுகளில் ரூ.13,000 கோடியும் திரட்டப்பட்டது. ஏற்கெனவே பேரிடர்கால தேவைகளுக்கு நிதியம் உள்ளபோது ஏன் புதியநிதியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தநிலையில் கொரோனாவை தனியாக கையாள்வதற்காக இதில் வரும் நிதி பயன்படுத்தப்படும் என்பது போன்ற பதில்களை பாஜக ஆதரவாளர்கள் கூறினார்கள்.

இந்த நிதியம் ஒன்றிய பாஜக அரசால் கொண்டு வந்தது என்பதால் கார்ப்பரேட் சமூகப்பொறுப்பு (CSR) நிதியையும் திரட்டி முடியும்என்று அரசு கூறியது. குறிப்பாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு அமைச்சர்களே அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்தனர். இப்படி பல வழிகளில் மிக வேகமாக பிஎம் கேர்ஸ் க்கு பணம்திரட்டப்பட்டது. அதே வேகத்தில் வரவு செலவு தொடர்பான உண்மைகள் மறைக்கப்பட்டன.

இதனால் பலத்த சந்தேகம் எழுந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாகமக்கள் தகவல் கேட்கத் தொடங்கியபோது, இதுஒரு ‘பொது அமைப்பு’ (public authority)அல்ல எனவும் அதனால் அது குறித்த தகவல்களை தர முடியாது எனவும் அரசு கூறிவிட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு

முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாடாளுமன்றத்திலும் கேள்விகள் எழுப்பப்பட்டது. உடனடியாக மக்களவையின் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் கீழ்பிஎம் கேர்ஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்கப்படாது என்று பிரதமரின் அலுவலகம் (PMO) மக்களவைச் செயலகத்திடம் தெரிவித்து விட்டது. இதற்கு இடையில் நிதியத்தின் தணிக்கை அறிக்கைகள் திடீரென காணாமல் போனதும் கடும்சந்தேகங்களை எழுப்பியது.

பிஎம் கேர்ஸ் நிதிக்கு யார் யார் எவ்வளவு பணம் செலுத்தியுள்ளார்கள். அந்த பணம் எதற்கெல்லாம்பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் துளி அளவு கூட பாஜக அரசுவெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை. இதன் காரணமாக ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதுஎன சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக பிஎம் கேர்ஸ் நிதியம் ஏன் 8000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை “ பயன்படுத்தாமல் முடக்கிவைத்துள்ளது?” என்று சமூக செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார். பிஎம் கேர்ஸ் தொடர்பான விவரங்களை பாஜக அரசு தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது. கொரோனா பேரிடரில் எவ்வளவு நிதி பயன்படுத்தப்பட்டது? வேறு பேரிடர்கள் ஏற்பட்ட போது இந்த நிதிபயன்படுத்தப்பட்டதா இல்லையா? அந்த பணத்தை என்ன செய்ய போகிறது?. அம்பானி அதானிக்கு மோடி அரசுதாரை வார்க்கப் போகிறதா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.