தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

16 May 2026, 11:25 pm
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

இராமநாதபுரம், மே 16- ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கு, மார்ச் 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் +1 அரியர் தேர்வர்கள் மற்றும் விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மார்ச் 2026 பருவத்தில் முதலாம் ஆண்டு ( +1 Arrear) /மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வினை பள்ளி மாணாக்கர் களாக எழுதி தேர்ச்சி பெறாதோர் /வருகை புரியாதோர், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஜூன் / ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதி யுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2026 மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்) / மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்கள் நீங்கலாக) காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு அனுமதித் திட்டம் 18.05.2026 (திங்கட்கிழமை) முதல் 30.05.2026 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் ஜூன்/ஜூலை 2026 மேல்நிலை துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கத் தவ றும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் உரிய கட்டணத்தினை செலுத்தி 1.6.2026 (திங்கட்கிழமை) மற்றும் 2.6.2026 (செவ்வாய்க் கிழமை) ஆகிய நாட்களில் விண் ணப்பிக்க வேண்டும்.

சிறப்பு அனு மதிக் கட்டணம் - ரூ.1000- (2025 - 2026-ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் முழுமையாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சிபெறாத / வருகைபுரியாத மாணவர்களுக்கு மட்டும் இக்கட்ட ணத்திலிருந்து விலக்களிக்கப்படு கிறது). விண்ணப்பங்கள் ஆன்-லைனில் பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு கள் சேவை மையங்கள் (Govern ment Examinations Service Centres) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் (Government Examinations Service Centres) விவரங்கள் மற்றும் விண்ணப்பங் கள் பதிவு செய்தல் குறித்த தனித் தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை www. dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து முதன் மைக் கல்வி அலுவலர் அலுவல கங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வு கள் உதவி இயக்குநர் அலுவல கங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: விண்ணப் பிக்க வரும் தேர்வர்கள் அனை வரும் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் -1 ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்ல அறி வுறுத்தப்படுகிறது.

தேர்வுக்கால அட்டவணை ஜூன் / ஜூலை-2026 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டா மாண்டு துணைத்தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம் என்று இராமநாதபுரம் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்கு நர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.