பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர் பெயர்ப் பட்டியல் திருத்தத்திற்கு அவகாசம்
31 Oct 2026, 11:33 pm

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர் பெயர்ப் பட்டியல் திருத்தத்திற்கு அவகாசம்

சென்னை, அக்.31 -2026-27 கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அக்.31-க்குள் சரிபார்க்க வேண்டும் என்று முன்பு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுவே இறுதி வாய்ப்பு. எமிஸ் தளத்தில் பதிவேற்றப்பட்ட மாணவர் விவரங்களை, தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்துத் திருத்த வேண்டும். தமிழில் உள்ள மாணவர் அல்லது பெற்றோர் பெயரைத் திருத்த, ஏற்கெனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கிய பின்பே திருத்த முடியும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின் திருத்தம் செய்ய இயலாது. பெயர்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படுவதால், தவறுகளுக்கு வகுப்பாசிரியரும் தலைமையாசிரியருமே பொறுப்பு என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.