முந்தய பக்கம்

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடக்கம்

1 Mar 2026, 4:03 pm
தமிழகத்தில் இன்று முதல்  பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடக்கம்
<p><strong>தமிழகத்தில் இன்று முதல் &nbsp;பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடக்கம்</strong></p> <p>சென்னை, மார்ச் 1- தமிழ்நாட்டில் 12 ஆம் &nbsp;வகுப்பு (பிளஸ் 2) மாணவர் களுக்கான பொதுத் தேர்வு கள் திங்கள் (மார்ச் 2) அன்று தொடங்குகின்றன. சுமார் 8 லட்சத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திங்களன்று தொடங்க இருக்கும் நிலையில், தேர்வு கண்காணிப்பு ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய விதி முறைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்க &nbsp;வேண்டிய அறிவுரைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கள் விடைத் தாளில் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாகத் தாமே அடித்துவிடும் நிகழ்வு &nbsp;ஒழுங்கீனச் செயலாகக் கருதப்படும். அவ்வாறு செய்தால் தேர்வு முடிவு நிறுத்தப் படுவதுடன், அடுத்த இரு பருவங்களுக்கும் தேர்வு எழுத அனுமதிக்க இயலாது என அறி வுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) கடந்த நவம்பர் 5 ஆம் தேதி அறிவித்தபடி, தேர்வுகள் மார்ச் 2 முதல் மார்ச் &nbsp;26 வரை காலை 10 மணி முதல் மதியம் 1.15 &nbsp;மணி வரை நடைபெற உள்ளன. செய்முறைத் &nbsp;தேர்வுகள் கடந்த பிப்ரவரி 9 முதல் 14 வரை &nbsp;நடத்தப்பட்டன. முதலமைச்சர் வாழ்த்து &nbsp;12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் &nbsp;11 முதல் தொடங்கும் 10 ஆம் வகுப்பு தேர்வு &nbsp;எழுதும் மாணவர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதற்ற மின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி &nbsp;பெறுங்கள் என்றும், திமுக அரசு உங்களுக் கான வாய்ப்புகளை உறுதியுடன் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram