முந்தய பக்கம்

உழவே தலை! - க.சண்முகசிதம்பரம்

17 Jan 2026, 2:42 pm
உழவே தலை! - க.சண்முகசிதம்பரம்
<p><strong>உழவே தலை!</strong></p> <p>உழவினைச் செய்தல் வேண்டும் &nbsp; &nbsp; &nbsp; உயிர்களைக் காத்தல் வேண்டும்! கழனியும் செழிப்ப தற்கு &nbsp; &nbsp; &nbsp;காலமும் உழவும் வேண்டும்! &nbsp;உழவினைச் செய்யா விட்டால் &nbsp; &nbsp; &nbsp; உவர்நில மாகிப் போகும்! மழலையைப் போல நாமும் &nbsp; &nbsp; &nbsp; &nbsp;மண்ணையும் காத்தல் வேண்டும்! &nbsp;பண்படா நிலத்தில் நாமும் &nbsp; &nbsp; &nbsp; பயிர்களை நட்டு வைத்தால் புண்படக் காய்ந்து போகும் &nbsp; &nbsp; &nbsp; பொட்டலாய்க் காடும் மாறும் ! &nbsp;மண்ணையும் உழுது போட &nbsp; &nbsp; &nbsp; மலர்ந்துமே &nbsp;சிரிக்கும் நன்கு வண்ணமாய் அழகு தோன்றும் &nbsp; &nbsp; &nbsp; வளமையாய்க் காடும் மாறும்! &nbsp;இயற்கையைக் காக்க நாமும் &nbsp; &nbsp; &nbsp; இன்பமும் துள்ளும் வாழ்வில் ! முயற்சியும் செய்ய நாளும் &nbsp; &nbsp; &nbsp;முன்னேறக் காண்போம் பாரில் !</p>
Share
FacebookXWhatsAppTelegram