எஸ்ஐஆர் படிவங்களை திரும்பப்பெற மறுக்கும் பிஎல்ஓக்கள்
30 Nov 2025, 4:29 pm
<p><strong>எஸ்ஐஆர் படிவங்களை திரும்பப்பெற மறுக்கும் பிஎல்ஓக்கள்</strong></p>
<p>ஈரோடு, நவ.30- எஸ்ஐஆர் எனப்படும் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிக ளுக்காக வாக்காளர்களிடம் அளிக் கப்பட்ட படிவங்கள் திரும்பப்பெற மறுக்கப்படுவதாகப் புகார் எழுந் துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகாரைத் தொடர்ந்து, அடுத் தாண்டு சட்டப் பேரவை தேர்தல்கள் நடக்கவிருக்கும் மாநிலங்கள் உள் ளிட்டவற்றிற்கும் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறி வித்தது. கடந்த 4 ஆம் தேதி தொடங் கிய பணிகள் டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதற்கென நியமிக்கப்பட்ட அலுவ லர்கள், பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தேவையான விபரங்க ளைக் கேட்டு எழுதிச் சென்றனர். ஆனால், இந்த முறை ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரே மாதிரியான இரண்டு கணக்கீட்டு படிவங்கள் கொடுக்கப்படுகிறது. அதில் வாக் காளரின் பிறந்த தேதி, செல்போன் எண், 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற சட்டமன்ற தொகுதி எண், பெயர், பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்காளர் அட்டை எண் ஆகிய விபரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் உறவினர் என்ற பெயரில் வாக்கா ளரின் தந்தை, தாய், மனைவி உள்ளிட்டவர்களின் விபரங்களை யும் அதில் பூர்த்தி செய்ய வேண் டும். இந்த விபரங்கள் நன்கு எழுதப் படிக்க தெரிந்த பலருக்கும் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. இப்பணிக்கு வந்த பிஎல்ஓக்களுக் கும் உரிய பயிற்சி இல்லை. இந்நிலையில் வாடகை வீடுகளில் குடியிருந்தவர்களுக் கும், இடம் மாறி சென்றவர்களுக் கும் வீடில்லை, ஓட்டில்லை என்று கணக்கீட்டு படிவம் தர மறுத்தனர். இவ்வாறு படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுப்பது வாக் காளரின் கடமையாக்கப்பட்டது. இதற்கிடையில் 75 விழுக்காடு படி வங்கள் திரும்பப் பெறப்பட்டுள் ளது என்று மாவட்ட ஆட்சியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறினார். அப்போது படிவங்களைப் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்க ளுக்கு தொலைபேசி எண்கள் தொகுதிவாரியாக அளிக்கப்பட் டுள்ளது. அதனைப் பயன்ப டுத்திக் கொள்ளலாம் என்றும் கூறி யிருந்தார். ஆன்லைனில் எத்தனை படிவங்கள் பெறப்பட்டது என்ற கேள்விக்கு 1947 என்று பதில் வந்தது. மாவட்டத்தில் மொத்தம் சுமார் 20 லட்சம் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி பூர்த்தி செய்த படிவங்களைத் திருப்பித்தர வரும் டிச. 11ஆம் தேதி வரை அவகா சம் அளிக்கப்பட்ட நிலையில் ஞாயி றன்று அளிக்கப்பட்ட படிவங்கள் பெற மறுக்கப்பட்டாகப் புகார் எழுந் தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லையென்றாலும், வாய்மொழி உத்தரவு என்று கூறப்பட்டது. இதற் கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்க வந்திருந்த மாவட்ட ஆட்சி யரிடம் இதுபற்றி கூறியதற்கு பெற் றுக் கொள்ளப்படும் எனப்பதிலளித் ததாக விவசாயி (சங்க தலைவர்) கே.வி.பொன்னையன் தெரிவித் தார்.</p>
