சாலை விதிகளை கடைப்பிடிக்க உறுதிமொழி
3 Jan 2026, 4:57 pm
<p><strong>சாலை விதிகளை கடைப்பிடிக்க உறுதிமொழி</strong></p>
<p>அம்பை, ஜன. 3- தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் வரும் 23 தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் சாலை பாதுகாப்பு மாதம் துவங்கியது. அம்பாசமுத்திரம் ஆடிஓ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகர், வாகன ஓட்டிகளிடம் பேசுகையில், “கண்டிப்பாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் (ஹெல்மெட்) கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். காரில் செல்பவர்கள் (சீட் பெல்ட்) அணிந்து செல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.</p>
