பன்முகத்தன்மையை நசுக்கும் சியோனிசக் கொடுமைகளுக்கு எதிரான காத்திரமான குரல்!
21 Jun 2026, 9:26 pm

பன்முகத்தன்மையை நசுக்கும் சியோனிசக் கொடுமைகளுக்கு எதிரான காத்திரமான குரல்!

மனித குலத்தின் ஆகப்பெரும் துயரக்கதைகளின் சாட்சி யங்கள் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவே எழுதப்படுகின்றன. மாபெரும் சிறை, மாபெரும் மயானம், மாபெரும் மருத்துவ மனை என இம் மூன்றும் ஒருங்கே அமைந்த பாலஸ்தீன நிலத்தின் தீராப் பெருந்துயரை உலகிற்கு உரக்கச் சொல்கிறது காசா பெண் எழுத்தா ளர்களின் 13 படைப்புகள் அடங்கிய ‘தயவு செய்து சுட்டுக் கொன்று விடு’ என்னும் நூல். பாலஸ்தீனத்தின் மீதான யூத இனவெறி (சியோனிச)அமெரிக்க ஏகாதிபத்தியச் சூழ்ச்சிகளைத் தோலு ரிக்கும் வகையில் மால்கம் எக்ஸ் எழுதிய விரிவான முன்னுரையுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தை ஒரே கருத்தி யலுக்குள் நசுக்கப் பார்க்கும் பாசிசக் கோட்பாடுகளுக்கும், பாலஸ்தீன மக்களின் நிலங்களை வஞ்சகமாக ஆக்கி ரமிக்கும் சியோனிசத் தந்திரத்திற்கும் பெரிய வேறுபாடில்லை. “பாலஸ்தீன த்திற்கு சுதந்திரம் இல்லாமல் உலகில் உள்ள எந்த மக்களுக்கும் சுதந்திரம் என்பது கிடையாது” என்ற மால்கம் எக்ஸ்-இன் ஆழமான பார்வையுடன் பாலஸ்தீன வரலாற்றை இந்நூல் பேசுகிறது. அமெரிக்காவின் ஆதர வோடு பாலஸ்தீனத்தின் 55 சதவீத நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்து, மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் உயர்ந்த கல்வி நிறுவனங்களை முற்றிலு மாக அழித்தொழிப்பதை நூல் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகிறது.

இத்தகைய நரகச் சூழலில் வாழும் மனிதர்களின் கதைகளை பேராசிரியர் ரிஃபாஅத் அல் அரீர் முயற்சியில் 13 இளம் பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். ஒரு மனிதர் எத்தகைய எல்லையற்ற துயரத்தை அடைந்திருந்தால் “தயவு செய்து என்னைச் சுட்டுக் கொன்றுவிடு” என்று கதற முடியும்? மின்சாரம், தொலைபேசி, உணவின்றி கழிந்த 15 கொடூர இரவுகளில் குண்டுச் சத்தங்களுக்கு

அஞ்சி நடுங்கும் குழந்தைகளுக்குக் கதை சொல்லித் தேற்றும் ஜஹான் அல்ஃபர்ராவின் சொற்களும், நூர் அல் போர்னோவின் கதையில் வரும் தம்பதியரின் சிதைந்த கனவுகளும் நம் நெஞ்சை உலுக்குகின்றன.

கொடுமைகள் நடக்கும் போது மௌனமாய் இருப்பது அதற்கு உடந்தை யாவதற்குச் சமம். உலக மனசாட்சியை உலுக்க எளிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல், பாலஸ்தீனத்திற்காக நாமும் உரக்கப் பேச வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பை ஏற்படுத்தும் ஒரு காத்திரமான தத்துவாயுதமாகும்.