ஜல் ஜீவன் திட்டத்தின் நிலுவை நிதியை வழங்குக! பிரதமருக்கு முதல்வர் கடிதம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>ஜல் ஜீவன் திட்டத்தின் நிலுவை நிதியை வழங்குக! பிரதமருக்கு முதல்வர் கடிதம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 13 - தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறை வேற்றத்தை விரைவுபடுத்தவும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடி யாக விடுவிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் (கட்டம்–3) செயல்பாட்டிற்கு ஒப்புதல் மற்றும் நிதியுதவி வழங்கவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பக மான குடிநீர் வழங்குவதில் மாநிலம் தொடர்ந்து முன்னணியில் இருப்பதை பெருமிதத்துடன் குறிப்பிட் டுள்ளார். கிராமப் புறங்களில் உள்ள 1.25 கோடி வீடு களில், 1.12 கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் முதல் கட்டத்தில் தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள், 56 பழைய கூட்டுக் குடி நீர் திட்டங்கள் மற்றும் 21,258 ஒற்றை கிராம குடிநீர் திட்டங்களை மொத்தம் ரூ.18,123 கோடியில் மேற் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். நிலுவையில் ரூ.3,112 கோடி இவற்றில் அனைத்து ஒற்றை கிராம திட்டங் களும், 101 கூட்டுக் குடிநீர் திட்டங்களும், பழைய திட் டங்களில் 92 புனரமைப்பு பணிகளும் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தற்போது பணியில் முன் னேற்றத்தில் உள்ளன. ஆனால் ஜல் ஜீவன் திட்டத் தின்கீழ் ஒன்றிய அரசின் பங்கு என ரூ.5,914 கோடி மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.3,112 கோடி நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரி வித்துள்ளார். 2024–25 ஆம் ஆண்டிற்காக ரூ.2,434 கோடி ஒதுக்கப் பட்டிருந்த போதிலும் ரூ.732 கோடி மட்டுமே வழங்கப் பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத் திற்குப் பிறகு எந்த நிதியும் வழங்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். திட்டப் பணி கள் பாதிக்கப்படாமல் நடைபெற தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2,550 கோடியை ஏற்கனவே விடுவித்துள்ளதாகவும், எனவே நிலுவை யில் உள்ள ரூ.3,112 கோடி நிதியை உடனடியாக வழங்க பிரதமர் தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு பாதிப்பு ஏற்படும் மேலும், ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் ரூ.8,428 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள ஒகேனக் கல் கூட்டுக் குடிநீர் திட்டம் (கட்டம்–3) குறித்து அவர் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி ஒதுக்கப் பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது உதவி வழங்க முடியாது என ஒன்றிய குடிநீர் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்புத் துறை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஆதரவிலிருந்து பின்வாங்குவது கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதே சமயம், ஜல் ஜீவன் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வுள்ள நிலையில், ஒகேனக்கல் திட்டத்திற்கு உட னடியாக ஒப்புதல் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய 10 புதிய கூட்டுக் குடி நீர் திட்டங்களை ரூ.7,590 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இத் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்தின்கீழ் நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து உள்ளார். தமிழ்நாட்டில் கிராமப்புற மக்களுக்கு நிலையான குடிநீர் வழங்க ஒன்றிய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதல மைச்சர், இந்த விஷயத்தில் பிரதமர் விரைவான தலையீடு செய்ய வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
