முந்தய பக்கம்

அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்குக!

20 Nov 2025, 3:46 pm
அகவிலைப்படி உயர்வை  விரைந்து வழங்குக!

அகவிலைப்படி உயர்வை  விரைந்து வழங்குக!

கே. ஆறுமுகநயினார் வலியுறுத்தல்

சென்னை, நவ. 20 - போக்குவரத்து துறை அமைச் சர் ஒப்புக் கொண்ட வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி வியாழ னன்று (நவ.20) பல்லவன் இல்லம் முன்பு தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய கே. ஆறுமுக நயினார் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர் களின் 62 நாள் காத்திருப்பு போராட்ட த்தைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பல்வேறு உறுதிகளை வழங்கினார். குறிப்பாக, தொழிலாளர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப் படும் பணம் உரிய கணக்கிற்கு செலுத்தப்படும். ஓய்வுபெற்றோரின் இதர பிரச்சனைகள் சம்பந்தமாக தொடர்ந்து பேசி தீர்வுகாணலாம் என்றார். பணி ஓய்வுபெற்ற தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுக்கால பலன்களை 3 மாதத் திற்கு வழங்க விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக துறை மேலா ளர் தெரிவித்தார். 17 மாத கால நிலுவைத்தொகை வழங்கப்படா மல் உள்ளது. இதர கோரிக்கை களும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.  அகவிலைப்படி உயர்வு குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, காலதாமதம் செய்யாமல் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக 62 நாள் காத்தி ருப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஓய்வூதியர்களுக்கு பாராட்டு நடை பெற்றது. நல அமைப்பின் தலைவர் டி. குருசாமி தலைமையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில், சம்மேளனத் தலைவர் அ. சவுந்தர ராசன் ஓய்வூதியர்களை கவுரவித் தார். அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் ஆர். துரை, பொதுச் செயலாளர் வி. தயானந்தம், நல அமைப்பின் செயலாளர் எஸ். குணசேகரன், பொருளாளர் எஸ். ஆதிமூலம், ஓய்வூதியதாரர் ஒருங்கி ணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ். நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram