தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்த தொகையை வழங்கிடுக

20 Nov 2025, 3:46 pm
இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்த தொகையை வழங்கிடுக
<p><strong>இஎஸ்ஐ, பிஎஃப் பிடித்தம் செய்த தொகையை வழங்கிடுக</strong></p> <p>மேட்டுப்பாளையம், நவ.20- மேட்டுப்பாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித் தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் சந்தா தொகையை உடனடி யாக திரும்ப வழங்கக் கோரி, சிஐ டியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தி னர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது, மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுமார் 180 தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் கொசு ஒழிப்புப் பணியாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர். திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், இந்தப் பணிகளை மேற்கொள்ள நக ராட்சி நிர்வாகம் டெக்டஸ் இன்பரா &nbsp;பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத் துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு ஒப்பந்தத் தொழிலா ளர் நலச் சட்டத்தின்படி, ஒவ்வொருவ ரின் ஊதியத்திலிருந்தும் இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் சந்தா தொகை பிடித் தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகை, இன்றைய தேதிவரை இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் &nbsp;நிறுவனங்களில் பணியாளர்களின் கணக்குகளில் செலுத்தப்பட வில்லை என்று தெரியவருகிறது. தற் போது நிர்வாகக் காரணங்களுக்காக டெக்டஸ் நிறுவனத்துடனான ஒப்பந் தத்தை மேட்டுப்பாளையம் நகராட்சி ரத்து செய்துவிட்டு, இந்துஸ்தான் எஸ்எம் சொல்யூஷன், சென்னை என்ற நிறுவனத்திடம் புதிய ஒப் பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, டெக்டஸ் நிர்வாகம் தூய் மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் &nbsp;தொகையை, முதன்மை வேலைய ளிப்பவர் (PRINCIPAL EMPLOYER) என்ற அடிப்படையில், நகராட்சி நிர் வாகம் டெக்டஸ் நிறுவனத்தின் முன் வைப்புத் தொகையிலிருந்து பிடித் தம் செய்து, உடனடியாகத் தொழிலா ளர்களின் சந்தா கணக்குகளில் செலுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இம்மனுவினை, ஊரக வளர்ச்சி, &nbsp;உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கே.ரத் தினகுமார் மற்றும் சித்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.