தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாணியம்பாடி கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்திடம் பணத்தை பெற்றுத்தருக!

23 Feb 2026, 6:26 pm
வாணியம்பாடி கூட்டுறவு வீட்டு வசதி  வாரிய சங்கத்திடம் பணத்தை பெற்றுத்தருக!
<p><strong>வாணியம்பாடி கூட்டுறவு வீட்டு வசதி &nbsp;வாரிய சங்கத்திடம் பணத்தை பெற்றுத்தருக!</strong></p> <p>திருப்பத்தூர், பிப். 24- திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை யில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் ஜாப்ராபாத், மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் அதிகமான மூத்த குடிமக்கள் அளித்த மனுவில், வாணியம்பாடி கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கத்தில் (சி2613) எங்களை போல் பல பகுதிகளைச் சேர்ந்த 25 நபர்கள் ரூ. 1 கோடி வரை நிலையான வைப்பு தொகை முதலீடு செய்து இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாக எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டித் தொகை எதுவும் வழங்க வில்லை. மேலும் எங்களது பலரின் முத லீடுகள் ஏற்கனவே முதிர்வு அடைந்து விட்டது. எங்களது அசல் மற்றும் வட்டி தொகையை திருப்பி வழங்குமாறு சங்கத் திடம் கேட்டபோது எங்களது அசல் தொகையை கூட திருப்பி கொடுக்க மறுத்து விட்டனர். முதலீடு செய்தவர்கள் பெரும் பாலும் மூத்த குடிமக்கள். அவர்களின் வாழ் வாதாரத்துக்கு இந்த பணம் மட்டு முக்கிய ஆதாரம் ஆகும். எனவே &nbsp;எங்களுக்கு சேர &nbsp;வேண்டிய அசல் மற்றும் வட்டித்தொகையை பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர். திருப்பத்தூர் அடுத்த அத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி அளித்த மனுவில், ன் பொம்மிக்குப்பம் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் தொகை செலுத்தி 2 மாதங்கள் ஆகியும் இன்னமும் எனக்கு பயிர்கடன் வழங்கவில்லை. எனக்கு பின் மனு அளித்த 50 பேருக்கு பயிர் கடன் வழங்கி &nbsp;உள்ளனர். எனவே &nbsp;எனக்கு பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். ஆலங்காயம் இருணாப்பட்டு அடுத்த பாப்பானூர் மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு தார் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால், சாலை அமைக்கக் கோரி பல அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த நவம்பர் 10ம் தேதி சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக குரி சிலாப்பட்டு போலீசார் கல்லூரி மாண வர்கள், அரசு வேலைக்கு செல்லும் நபர்கள் &nbsp;உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எனவே இந்த வழக்கு மீது எந்த &nbsp;நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.