முந்தய பக்கம்

விளையாட்டு மைதானம் திறப்பு!

4 Mar 2026, 5:01 pm
விளையாட்டு மைதானம் திறப்பு!
<p><strong>விளையாட்டு மைதானம் திறப்பு!</strong></p> <p>நாமக்கல், மார்ச் 4- நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத் தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத் தில், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம், நவீன &nbsp;கபடி மைதானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் &nbsp;புதனன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத் தார். இதனையொட்டி நாமக்கல்லில் நடைபெற்ற விழா வில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்து கொண்டு &nbsp;பேசுகையில், இளம் வயதில் திருமணம் மற்றும் கருத் தரித்தல் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. இதனால் பல பெண் குழந்தைகளின் கல்வி பாதிக் கப்படுகிறது. எனவே, இதனைத் தடுக்கும் வகையில் மாணவிகள், கல்வி மற்றும் விளையாட்டில் அதிக &nbsp;கவனம் செலுத்தி, தங்கள் எதிர்காலத்தை வள மாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram