தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலைப் பகுதிகளில் நெகிழி கூடாது மாற்று வழி கண்டறிய ஆவினுக்கு உத்தரவு

22 Feb 2026, 3:26 pm
மலைப் பகுதிகளில் நெகிழி கூடாது மாற்று வழி கண்டறிய ஆவினுக்கு உத்தரவு

மலைப் பகுதிகளில் நெகிழி கூடாது மாற்று வழி கண்டறிய ஆவினுக்கு உத்தரவு

சென்னை, பிப்.22 - உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம் செய்வதற்குப் பதிலாக மாற்று வழிகளை கண்டறிய ஆவின் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுச்சுழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி தடை உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கு, இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றத்துக்கு உதவும் நபர்களாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர்கள், உதகை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழி குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக டெட்ரோ பாக்கெட்டுகளில் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நீலகிரியில் ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் நெகிழி உறைகள் புழக்கத்துக்கு வருகின்றன. எனவே, பாலை கண்ணாடி பாட்டில்களில் விநியோகம் செய்ய உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரியிருப்பதாகவும், 2013 ஆம் ஆண்டு ஆவின் நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் இதுவரை அந்நிறுவனம் எதுவும் செய்யவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நெகிழி குடிநீர் பாட்டில்களுக்கு விதிக்கப்பட்ட தடை நெகிழியால் தயாரிக்கப்படும் டெட்ரோ பாக்கெட்டுகளுக்கும் பொருந்தும்.  நெகிழி பாட்டில்களைவிட டெட்ரோ பாக்கெட்டுகள் சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானது. எனவே டெட்ரோ பாக்கெட்டுகளில் குடிநீர் விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது. அத்தகைய டெட்ரோ பாக்கெட்டுகளை பறிமுதல் செய்வதோடு, அவற்றை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். மேலும், நெகிழி பாக்கெட்டுகளுக்குப் பதிலாக பாலை விநியோகிக்க மாற்று வழிகளை ஆவின் நிறுவனம் ஆய்வு செய்து, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.