பிளாஸ்டிக் பைப் (பிவிசி) உற்பத்தி தீவிரம்!
6 Mar 2026, 3:17 pm
<p><strong>பிளாஸ்டிக் பைப் (பிவிசி) உற்பத்தி தீவிரம்!</strong></p>
<p>தமிழகத்தின் மிக முக்கிய தொழில் மையங்களில் ஒன்றாக திகழும் நாமக் கல் மாவட்டம், லாரி பாடி பில்டிங் மற்றும் கோழிப்பண்ணை தொழிலுக்கு அடுத்த படியாக, தற்போது பிளாஸ்டிக் பைப் (PVC Pipes) தயாரிப்பில் தென்னிந்தியாவி லேயே தடம் பதித்து வருகிறது. கோடைக் காலத்தின் வருகை மற்றும் அதிகரித்து வரும் கட்டுமானப் பணிகளால், இங்கு பிளாஸ்டிக் குழாய்களின் உற்பத்தி தற் போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 80 முதல் 120 வரையிலான சிறிய மற்றும் பெரிய அளவிலான பிளாஸ்டிக் குழாய் தயா ரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் முதன்மையான உற்பத்தி மற்றும் விற் பனை மையங்களாக உள்ளன. திருச்செங் கோட்டில் ஆழ்துளை கிணறு தொழிலுக் கான உயர்தர குழாய் உற்பத்தியில் முன் னணியில் உள்ளது. ராசிபுரத்தில் விவசாயத் தேவைகளுக்கான குழாய் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. இந்த பிளாஸ்ட்டிக் பைப் தொழிலின் மூலம் சுமார் 8,000 தொழிலாளர்கள் நேரடி யாகவும், போக்குவரத்து மற்றும் பிளம் பிங் சார்ந்த 15,000-க்கும் மேற்பட்டோர் மறை முகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் குழாய்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக் கும் பெருமளவில் அனுப்பப்படுகின்றன. ஒரு கட்டிடம் கட்டுவதற்கு சிமெண்ட், செங்கல் எவ்வளவு முக்கியமோ, அதே அள விற்கு பிளாஸ்டிக் குழாய்களும் அவசியமா கின்றன. நிலத்தடி நீர் இணைப்பு, கழிவறை மற்றும் சமையலறை பிளம்பிங் வேலை கள் மட்டுமின்றி, மின்சார ஒயர்களை பாது காப்பாக கொண்டு செல்லவும் பிளாஸ்டிக் குழாய்களே பயன்படுகின்றன. இதுகுறித்து பள்ளிபாளையம் - குமார பாளையம் சாலையில் தொழிற்சாலை நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர் கூறுகை யில், “ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களே எங்களின் நிரந் தர வாடிக்கையாளர்கள். அவர்கள் ஆண்டு முழுவதும் ஆர்டர்களை வழங்குவதால் தொழில் தொய்வின்றி நடக்கிறது. தற் போது கோடைக்காலம் என்பதால் பொது மக்கள் பழைய குழாய்களை மாற்றுவதி லும், 500 முதல் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் வாட்டர் டேங்குகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்ற னர்.” தற்போது பிளாஸ்டிக் பைப் தயாரிப் பில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதால், மனித உழைப்பு குறைவாகவும் உற்பத்தித் திறன் அதிகமாகவும் உள்ளது. குடிநீர் வழங்கலுக்காக அரை இன்ச் முதல் 7 இன்ச் வரையிலான பிவிசி குழாய்கள் மற் றும் மூன்று விதமான தரங்களில் மின்சாரப் பயன்பாட்டு குழாய்கள் தயாரிக்கப்படு கின்றன. இருப்பினும், இத்தொழிலில் சில சவால் களும் நீடிக்கின்றன. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டணம் ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. ஒரு நடுத்தர தொழிற்சாலைக்கு இரண்டு மாதத்திற்கு ரூ.70,000 முதல் ரூ.80,000 வரை மின் கட்டணம் வருவதாக உற்பத்தியா ளர்கள் தெரிவிக்கின்றனர். சித்திரை மாதத்திற்குப் பிறகு வைகாசி யில் புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கு வது வழக்கம். அந்தச் சமயத்தில் ஆர்டர் கள் மேலும் குவியும் என்பதால், உற்பத்தி யாளர்கள் இப்போதே கையிருப்பை அதிகப் படுத்தி வருகின்றனர். கடுமையான தொழில் போட்டி இருந்தாலும், தரமான பொருட் களை வழங்குவதன் மூலம் நிரந்தர வாடிக் கையாளர்களை தக்கவைத்து, லாபகர மாக தொழிலை முன்னெடுத்து வருவதாக உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். -எம்.பிரபாகரன்</p>
