கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
18 Mar 2026, 3:34 pm

காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுகள் நடும் பணி துவக்கம்

உதகை, மார்ச் 18- கோடைவிழாவை முன்னிட்டு, குன்னூர் காட்டேரி பூங்காவில் மூன்று லட்சம் மலர் நாற்றுக்கள் நடும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை யின் கீழ் இயங்கும் குன்னூர் காட்டேரி பூங்காவில், இந்தாண்டு முதல் பருவத்திற் கான மலர் செடிகள் நடவுப்பணியினை மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் நவநீதா துவக்கி வைத்தார். நடவு பணியை முன்னிட்டு, மேரிகோல்டு குட்டை ரகம் (பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க வகை) பிளாக்ஸ், ஆஸ்டர், பெகோனியா, வெர்பினா ஆன்டிரினம், பால்சம், ஸ்வீட் வில்லியம், சால் வியா, குட்டை ரக சால்வியா, என 30 வகை மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர் லாந்து, கொல்கத்தா, காஷ்மீர், போன்ற இடங் களிலிருந்து பெறப்பட்டு நாற்றுக்கள் உற் பத்தி செய்யப்பட்டு சுமார் மூன்று லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மலர்கள் அனைத்தும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து பூத்து குலுங்கும். கடந்த வருடம் 1,00,389 சுற்றுலாப் பயணிகள் காட் டேரி பூங்காவிற்கு வருகைப் புரிந்துள்ளனர். 2025 – 2026 ஆம் ஆண்டில் இதுவரை 94,175 சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிந்துள்ள னர். ஏப்ரல் மற்றும் மே மாத கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ்.ஜெயலட்சுமி, உதவி இயக்குநர் ம.விஜயலட்சுமி, குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைத்துறை அலுவலர் ஜெய பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

நில மோசடி: விஏஓ உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு

தருமபுரி, மார்ச் 18- தருமபுரியில் நில மோசடி தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் உட்பட 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (41). இவர் தனது மனைவி பெயரில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா பெற்ற நிலத்தில் வீடுகட்டி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனி டையே, கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த பகுதி யில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற் றிய பா.கார்த்திக் (32), சம்பந்தப்பட்ட நிலத் திற்கு வட்டாட்சியரின் பட்டா மாறுதல் உத்தரவு பெறாமல் போலி ஆவணங்கள் மூலம் வேறு நபர்களுக்கு கிரையம் செய்த தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் செல்வம் புகா ரளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச் சந்திரன் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், செல்வி (40), ரத்தினம்மாள் (60), ஈஸ்வரி (43), அருணா (32), செல்வராஜ் (47) வெங்கடேஸ்வரன் (35), பூமாலை (23) ஆகிய 8 பேர் மீது மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுமதியின்றி இயங்கும் கரித்தொட்டி ஆலை

திருப்பூர், மார்ச் 18 – தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம், வேலாம்பூண்டி பகுதி யில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனி யார் கரித்தொட்டி ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாயன்று கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முற்று கையிட்டனர். வேலாம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரிக்காரன் வலசு கிராமத்தில் கடந்த 7 மாதங் களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூ ழல் துறையின் அனுமதியின்றி இந்த கரித் தொட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட் டுகின்றனர். ஆலையின் புகையால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் கருப்பாக மாறிய தால், பாசனத்திற்கும், கால்நடைகளின் குடி நீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை உரு வாகியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தையே நம்பி வாழும் இப்பகுதியில், புகை மாசு காரணமாக பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள் ளதுடன், மண்வளமும் சீரழிந்து வருகிறது. மேலும், தொடர்ந்து நச்சுப் புகையை சுவாசிப் பதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திண றல், ஆஸ்துமா, கண் எரிச்சல், தோல் ஒவ் வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆலையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கன்னி வாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தினர். வருவாய் ஆய்வாளர் மாலதியிடம் மனு அளித்த அவர்கள், ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற் றும் வருவாய்த் துறை அதிகாரிகள், உடனடி யாக தேர்தல் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த னர். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

திருப்பூர், மார்ச் 18- மாவட்ட தேர்தல் அலுவ லர் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்றத் பொதுத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரண வரே செவ்வாயன்று திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் அமைக்கப்பட் டுள்ள ஊடக சான்றளிப்பு மற் றும் கண்காணிப்பு குழு மையம் மற்றும் தேர்தல் கட் டுப்பாட்டு அறையினை பார் வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (தேர்தல்) கண்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார், வட்டாட் சியர் (தேர்தல்) கனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.

அனுமதியின்றி இயங்கும் கரித்தொட்டி ஆலை

திருப்பூர், மார்ச் 18 – தாராபுரம் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம், வேலாம்பூண்டி பகுதி யில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனி யார் கரித்தொட்டி ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாயன்று கன்னிவாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முற்று கையிட்டனர். வேலாம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரிக்காரன் வலசு கிராமத்தில் கடந்த 7 மாதங் களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூ ழல் துறையின் அனுமதியின்றி இந்த கரித் தொட்டி ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட் டுகின்றனர். ஆலையின் புகையால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர் கருப்பாக மாறிய தால், பாசனத்திற்கும், கால்நடைகளின் குடி நீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை உரு வாகியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தையே நம்பி வாழும் இப்பகுதியில், புகை மாசு காரணமாக பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள் ளதுடன், மண்வளமும் சீரழிந்து வருகிறது. மேலும், தொடர்ந்து நச்சுப் புகையை சுவாசிப் பதால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திண றல், ஆஸ்துமா, கண் எரிச்சல், தோல் ஒவ் வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆலையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, கன்னி வாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தங்கள் கோரிக்கை களை வலியுறுத்தினர். வருவாய் ஆய்வாளர் மாலதியிடம் மனு அளித்த அவர்கள், ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற் றும் வருவாய்த் துறை அதிகாரிகள், உடனடி யாக தேர்தல் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்த னர். இதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

திருநங்கைகளை இழிவுபடுத்தும் திருநர் சட்டத் திருத்த மசோதா

கோவை, மார்ச். 18– ஒன்றிய அரசு அண்மையில் கொண்டு வந் துள்ள திருநர் சட்டத் திருத்த மசோதா, திரு நங்கை மற்றும் திருநம்பிகளின் முன்னேற் றத்திற்கு வழிவகை செய்யாமல், அவர்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள தாகத் தேசிய திருநர் பேரவையின் உறுப்பி னர் கல்கி சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள் ளார். கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் புத னன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித் தல் அமைச்சர் வீரேந்திரகுமார் அறிமுகப்ப டுத்தியுள்ள இந்த சட்டத் திருத்தம், திரு நங்கை சமூகத்தின் அடையாளத்தையே அழிப்பதாக உள்ளது. குறிப்பாக, ஒருவர் தனது பாலின அடையாளத்தை மாற்றிக் கொள்ள அரசு சான்றிதழ் பெற வேண்டு மெனில், மருத்துவப் பரிசோதனைக்குட் பட வேண்டும் என்ற விதிமுறை மனித மரியா தையை மீறும் செயலாகும். ஆண் அல்லது பெண் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இல்லாத இத்தகைய நிபந்தனை திருநங்கைகளுக்கு மட்டும் விதிப்பது பாரபட்சமானது. மேலும், 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் (NALSA vs Union of India) சுய அடையாள உரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உறுதி செய் யப்பட்டிருந்தது. ஆனால், தற்போதுள்ள ஒன் றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு குறித்து தெளிவான திட்டங்கள் இல்லை. மாறாக, திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்மு றைகளுக்கு மிக குறைந்த தண்டனை களே முன்வைக்கப்பட்டுள்ளன. அதே சம யம், கட்டாய பிச்சை எடுத்தல் போன்ற குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை கள் வழங்கப்படுவது முரணாக உள்ளது. இந்த மசோதாவில் ‘திருநங்கை’ என்ற மரியாதையான சொல்லுக்குப் பதிலாக ‘அர வாணி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள் ளதை சுட்டிக்காட்டிய அவர், ‘திருநங்கை’ என்பது ஒரு மதச்சார்பற்ற, மரியாதையான அடையாளம் என்பதால் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அந்தச் சொல்லையே பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். ஒன்றிய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட மாநிலப் பிரதிநிதிகளிடம் எந்த ஆலோச னையும் நடத்தாமல் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிராக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் விரைவில் போராட்டங்கள் தீவிரமடையும் என்றும், எங்களது சுயமரி யாதையை காயப்படுத்தும் இச்சட்டத் திருத் தத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கல்கி சுப்பிரமணி யம் கேட்டுக்கொண்டார்.

காட்டேரி பூங்காவில் மலர் நாற்றுகள் நடும் பணி துவக்கம்

உதகை, மார்ச் 18- கோடைவிழாவை முன்னிட்டு, குன்னூர் காட்டேரி பூங்காவில் மூன்று லட்சம் மலர் நாற் றுக்கள் நடும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை யின் கீழ் இயங்கும் குன்னூர் காட்டேரி பூங்கா வில், இந்தாண்டு முதல் பருவத்திற்கான மலர் செடிகள் நடவுப்பணியினை மாவட்ட தோட் டக்கலைத்துறை இணை இயக்குந, நவநீதா துவக்கி வைத்தார். நடவுப்பணியை முன்னிட்டு, மேரிகோல்டு குட்டை ரகம் (பிரெஞ்சு மற்றும் ஆப்பிரிக்க வகை) பிளாக்ஸ், ஆஸ்டர், பெகோ னியா, வெர்பினா ஆன்டிரினம், பால்சம், ஸ்வீட் வில்லியம், சால்வியா, குட்டை ரக சால் வியா, என 30 வகை மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, கொல்கத்தா, காஷ் மீர், போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டு நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் மூன்று லட்சம் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மலர்கள் அனைத்தும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து பூத்து குலுங் கும். கடந்த வருடம் 1,00,389 சுற்றுலாப் பய ணிகள் காட்டேரி பூங்காவிற்கு வருகைப் புரிந் துள்ளனர். 2025 – 2026 ஆம் ஆண்டில் இது வரை 94,175 சுற்றுலாப் பயணிகள் வருகைப் புரிந்துள்ளனர். ஏப்ரல் மற்றும் மே மாத கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் தோட் டக்கலை துணை இயக்குநர் எஸ்.ஜெயலட் சுமி, உதவி இயக்குநர் ம.விஜயலட்சுமி, குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைத் துறை அலுவலர் ஜெய பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.3 லட்சம் வரை எடுத்து செல்ல கோரிக்கை

சேலம், மார்ச் 18- சேலம் மாவட்ட ஆட்சிய ரும், தேர்தல் அதிகாரியு மான பிருந்தா தேவியை புதனன்று சந்தித்து மளிகை வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் நடராஜன் கூறுகை யில், தேர்தல் தேதி அறிவிக் கப்பட்டதையடுத்து, தற் போது வணிகர்கள் ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுத் துச் செல்ல அனுமதி வழங் கப்பட்டுள்ளது. அதற்கு மேல் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு கடந்த 15 ஆண் டுகளுக்கு முன்பு நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் தற்போ தைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, வணிகர் கள் பொருட்கள் கொள் முதல் செய்ய ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனு மதி வழங்க வேண்டும். டிஜிட்டல் பணப்பரி வர்த்தனை மொத்த வணி கர்களுக்கு சிரமமில்லை. ஆனால் சில்லறை வணிகம் செய்பவர்கள் அதிக சிர மங்களை எதிர்கொள்கி றார்கள். எனவே, வணிகர் களின் நிலையை கருத்தில் கொண்டு பணம் எடுத்துச் செல்லும் வரம்பை உயர்த்த வேண்டும் என அவர் வலியு றுத்தினார்.