கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
4 Jan 2026, 5:55 pm

3 லட்சம் மலர் நாற்றுகள் நடும் பணி துவக்கம்

உதகை, ஜன.4- கோடை சீசனுக்காக உதகை தேயிலை பூங்காவில் 3 லட்சம் மலர் நாற்றுக்கள் மற்றும் அலங்கார செடிகள் நடவுப் பணிகள் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல லட்சம் சுற்றுலாப் பயணி கள் வந்து செல்வது வாடிக்கை. அப்போது, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தோட்டக் கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு அதில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். மேலும், அலங்கார செடிகளை கொண்டு பூங்கா முழுவதிலும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்வர். உதகை அருகே உள்ள தொட்ட பெட்டா தேயிலை பூங்காவிலும் ஆண்டுதோறும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா வண் ணமயமாக காட்சியளிக்கும். மேலும், இங்கு பல லட்சம் அலங்கார செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு அவை கள் இந்த பூங்கா முழுவதிலும் அலங்கரித்து நடவு செய்யப்படும். மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பூங்காவில் மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் உற்பத்தி துவக் கப்படும். இந்நிலையில் வரும் கோடை சீசனுக்காக தொட்ட பெட்டா தேயிலை பூங்காவில் 3 லட்சத்திற்கும் மேற் பட்ட மலர் நாற்றுக்கள், அலங்கார செடிகள், தொட்டி கள், தொங்கும் மலர் தொட்டிகள் ஆகியவை தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த மலர் செடிகள் நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. 30 வகையான மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடவு செய் யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படு கிறது.

லாரி மோதி விபத்து

கோவை, ஜன.4- கருமத்தம்பட்டியிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள மின் கம்பத்தில் லாரி மோதிய விபத் தில், லாரி தீப்பற்றி எரிந்தது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கருமத்தம் பட்டியிலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரமிருந்த மின் கம்பத்தின் மீது பலமாக மோதியது. ஞாயிறன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த விபத்தில், மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் லாரி திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. விபத்தை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக லாரியிலிருந்து கீழே குதித்ததால் எவ்வித காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். எனினும், தீ மளமளவென பரவியதில் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருமத்தம்பட்டி தீய ணைப்புத் துறையினர், லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். விபத்து நடந்த பகுதியில் கருமத்தம் பட்டி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டதோடு, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.