அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்க திட்டம்
22 Mar 2026, 4:19 pm
<p><strong>அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்க திட்டம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 22- 2026 சட்டமன்றத் தேர்தலில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அனைவரும் வாக்க ளிக்கும் வகையில், குடியிருப்புகளிலேயே வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவ தால், முதியவர்கள் மற்றும் உடல்நல குறை பாடுள்ளவர்கள் வசதியாக வாக்களிக்கும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்படு கிறது. அதன்படி, சென்னையில் 5, திருவள்ளூ ரில் 4, காஞ்சிபுரத்தில் 2, செங்கல்பட்டில் 2 மற்றும் மதுரையில் 1 என மொத்தம் 14 வாக்குச் சாவடி மையங்கள் அடுக்குமாடி குடியிருப்பு களில் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் ஆணையம், தேர்தல் விளம்ப ரங்கள் தொடர்பான முக்கிய வழிகாட்டு நெறி முறைகளையும் அறிவித்துள்ளது. மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் ஊடகச் சான்ற ளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாக முன்-சான்றிதழ் பெற வேண்டும். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப் பட்ட அனைத்து உள்ளடக்கங்களிலும் தெளி வான லேபிள் இடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தவறான அல்லது சட்டவிரோத உள்ளடக்கங்கள் மூன்று மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் வாக்கா ளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள 75,037 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஆண்டு ஊதியம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. 2025-26 ஆண்டிற்காக இவர் களுக்கு மொத்தம் ரூ.99 கோடியே 81 லட்சத்து 54 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.</p>
