தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டிரோன்கள் மூலம் ரயில் - யானை மோதலை தடுக்க திட்டம்

23 Feb 2026, 5:35 pm
டிரோன்கள் மூலம் ரயில் - யானை மோதலை தடுக்க திட்டம்
<p><strong>டிரோன்கள் மூலம் ரயில் - யானை மோதலை தடுக்க திட்டம்</strong></p> <p>கோவை, பிப்.23- எட்டிமடை - வாளையாறு ரயில்வே தண்டவாளம் இடையே ரூ.8.3 கோடி &nbsp;மதிப்பீட்டில் 3 கம்பிவழி &nbsp;இணைப்பு டிரோன்கள் &nbsp;மூலம் ரயில் யானை மோதலை தடுக்க வனத் துறை புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர். கோவையிலிருந்து கேர ளம் செல்லும் ரயில்கள், எட்டிமடை - வாளையாறு இடையே சுமார் 7 &nbsp;கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக செல் கிறது. இவ்வழியாக செல்லும் ரயில்கள் மோதி, யானைகள் உயிரிழக்கும் சம்பவங் கள் நடைபெற்று வந்தது. கடந்த 2021 வரை சுமார் 30 யானைகள் உயிரிழந்துள்ளன. இத னிடையே, ரயில் - யானை மோதலை தடுக்க, &nbsp;ரயில்வே துறை சார்பில் 2 சுரங்க பாதைகள் &nbsp;அமைக்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறை சார்பில் எட்டிமடை பகுதியில் ரூ.7.2 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு கண் காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறை &nbsp;அமைக்கப்பட்டது. அதன்பின் கடந்த 2023 முதல் தற்போது வரை ரயில் யானை மோதல் &nbsp;முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இது வரை சுமார் 7 ஆயிரம் முறை யானைகள், &nbsp;ரயில்வே தண்டவாளத்தை பத்திரமாக &nbsp;கடந்துச் சென்றுள்ளது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் கண் காணிக்க இயலாத பகுதிகளையும் கண்ட றிந்து, ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் கம்பிவழி இணைப்பு டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் முடிவு &nbsp;செய்யப்பட்டுள்ளது. அதன்படி 24 மணி நேர மும் மின் இணைப்புடன் நிலையாக நிற்கும் &nbsp;3 டிரோன் கேமராக்கள் அமைக்கப்பட்டுள் ளது. இதன் மூலம் யானை ரயில்வே தண்டவா ளம் அருகே வரும் போது, வேறு ஒரு டிரோன் &nbsp;மூலம் தேனீ ஒலி மற்றும் அலார்ட் விளக்கு களை எரிய விட்டு சென்று யானையை விரட்ட &nbsp;ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள் ளது. தனியார் நிறுவனம் மூன்று ஆண்டு களுக்கு திட்ட செயல்பாடு மற்றும் பராமரிப்பு &nbsp;பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.