தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த திட்டம்
2 Feb 2026, 4:51 pm
<p><strong>தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த திட்டம்</strong></p>
<p>உடுமலை, பிப்.2- தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த உடுமலை தோட்டங்கலைத்துறை சார் பில் மானிய விலையில் மருந்துகள் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து உடுமலை தோட்டக் கலைத்துறை வெளியிட்டுள்ள அறிக் கையில், சமீப காலத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதி கமாக உள்ளதால், அவற்றை கட்டுப்ப டுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து ஒருங்கிணைந்த முறை யில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி டும் வகையில், தோட்டக்கலைத்துறை மூலமாக தென்னையில் வெள்ளை ஈ தடுப்பு திட்டத்தில் மானியம் (மஞ்சள் சீட் மற்றும் ஒட்டுண்ணி) வழங்கப்பட வுள்ளது. இதை வாங்க விவசாயிகள் தங்களின் விளைநிலத்தின் சிட்டா மற் றும் ஆதார் நகல், ரேசன் கார்டு, பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 2, மேலும் கூட்டு சிட்டாவாக இருந்தால் உரிமை சான்று நகல், அடங்கல் நகல் போன்ற ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை தொடர்பு கொள் ளலாம். அதிகாரிகளை தொடர்பு கொள் ளும் வகையில் சிங்கார வேல் – 9524727052, சித்தேஸ்வரன் -8883610449, ராஜ்மோகன் -9585242502 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.</p>
