தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் போராட்டத்தால் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து

6 Mar 2026, 3:17 pm
விவசாயிகள் போராட்டத்தால் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து
<p><strong>விவசாயிகள் போராட்டத்தால் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து</strong></p> <p>கள்ளக்குறிச்சி, மார்ச் 6- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நைனார்பாளையம் மணிமுத்தாறு நதிக்கரையில் மனிதக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதி அளித்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமாரைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (மார்ச் 6) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், திருநாவலூர் ஒன்றியம் டி.ஒரத்தூர் முதல் களவனூர் களர்குப்பம் வரையும், பாதூர் முதல் சேஷநதி வரை உள்ள வயல்வெளி சாலை அமைத்திடவும், ஆணை மடுவு குட்டையை ஆழப்படுத்திட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தும் ஓராண்டாக நிர்வாக அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் திட்ட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. &nbsp;மேலும், நெமிலி பஸ் நிறுத்தம் வரை உள்ள வயல்வெளி சாலையைச் சீர் செய்து புதிய தார் சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டும், செம்பியன்மாதேவி முதல் பொறையூர் வரை சாலையை மேம்படுத்திட வேண்டும், தியாகதுருகம் ஒன்றியம் சிறு நாகூர் ஊராட்சி சித்தேரிக்குச் செல்லும் வயல்வெளி சாலையைச் சரி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. மாவட்டச் செயலாளர் ஏ.வி. ஸ்டாலின் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள், த.க.வி.ச மாநிலச் செயலாளர் எஸ். ஜோதிராமன், மாவட்டப் பொருளாளர் எம்.சி. ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர். &nbsp;ஒன்றியச் செயலாளர்கள் சி. பெரிய சாமி, ஆர். பாபு, ஏ. சண்முகம், ஆர். சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். குணசேகரன், வட்டப் பொருளாளர் பி. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் எம்.வி. ஏழுமலை, பி.தெய்வீகன், ஜி. அருள்தாஸ், கே.அய்யனார், ஜி.மணிமாறன், விதோச மாவட்டத் தலைவர் அ.பா. பெரியசாமி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். &nbsp;இந்தப் போராட்டத்தால், நைனார்பாளை யம் மணிமுத்தாறு நதிக்கரையில் மனிதக் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.