தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அமைச்சருக்கு ஐடி ஊழியர்கள் சங்கம் கண்டனம்

29 Oct 2026, 9:46 pm
ஒன்றிய பாஜக அமைச்சருக்கு ஐடி ஊழியர்கள் சங்கம் கண்டனம்

ஒன்றிய பாஜக அமைச்சருக்கு ஐடி ஊழியர்கள் சங்கம் கண்டனம்

பெங்களூருஒன்றிய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய - நெதர்லாந்து நாடுகளின் வணிகக் கருத்தரங்கில்,”இந்தியாவில் யாரும் உங்களிடம் (கார்ப்பரேட் முதலாளிகளிடம்) ‘மணி 5 ஆகிவிட்டது’ என்றுசொல்ல மாட்டார்கள். அதே போல ‘இது வார இறுதி நாள்’ என்பதை நினைவூட்ட மாட்டார்கள்” என்றுபேசினார். அதாவது இந்தியாவில்வேலை நேரம் அல்லது வார இறுதிநாட்களைப் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்று மனிதாபிமானமற்ற முறையில் பேசினார்.

இந்நிலையில், பியூஷ் கோயலின் இந்த அடாவடி பேச்சுக்கு கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம் (Karnataka State IT/ITeS Employees Union) கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,”ஒன்றிய அமைச்சரின் பேச்சு பெருநிறுவனங்கள் வேலை நேர விதிமுறைகள், வாராந்திர விடுமுறைகள்,தொழிலாளர் சட்டப் பாதுகாப்புகளைப் புறக்கணிப்பதற்கான முழுச்சுதந்திரத்தை அளிப்பதாக உள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் வார இறுதி நாட்கள் உட்பட அனைத்து நேரங்களிலும் முதலாளிகளுக்குக் கிடைக்கப்பெறுவார்கள் என்று சித்தரிப்பதன் மூலம், ஒன்றிய அமைச்சரே நவீன அடிமைத்தனக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறார்.

மேலும் அவரது பேச்சு, அதிகப்படியான வேலை நேரத்தை ஆதரித்தும், வேலை-வாழ்க்கை சமநிலைக்கு எதிராகவும் கருத்து தெரிவித்த நாராயண மூர்த்தி மற்றும் எல்&டி தலைவர் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கைகளையே எதிரொலிக்கிறது. இந்தியத் தொழிலாளர்கள் ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட வேலை நேரம், பணியிட மன அழுத்தம், மனச்சோர்வு, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை இழத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நிலைமைஇப்படி இருக்கும் சூழ்நிலையில், ஒன்றிய அமைச்சரே கொடூரமான மற்றும் மனிதத்தன்மையற்ற உழைப்புச் சுரண்டலை இயல்புபடுத்துவதும், தொழிலாளர் பாதுகாப்புகளைப் புறக்கணிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதனால் மனிதத்தன்மையற்ற வேலை நிலைமைகளைஇயல்புபடுத்தும் இந்த முயற்சியையும், தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு எந்நேரமும் கிடைக்கக்கூடிய வளங்களாக நடத்துவதையும் எதிர்த்துப் போராட அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும், தொழிற்சங்கங்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இந்தியத் தொழிலாளர்கள் வேலைக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்க்கைக்குத் தகுதியானவர்கள். கார்ப்பரேட் லாபங்களின் பலிபீடத்தில் அவர்களின் நேரம், கண்ணியம் மற்றும் நலன் தியாகம்செய்யப்படக் கூடாது” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.