வயநாடு: நிலச்சரிவு பாதித்த இடங்களை பார்வையிட்டார் பினராயி விஜயன்!
9 hours before
<p>வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார்.</p><p>வயநாடு மாவட்டம், மெப்பட்டியில் தனியார் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் 5 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கல்லாடி, மீனாட்சிப்புழா உள்ளிட்ட பகுதிகளை முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.வி.ஜெயராஜன், வயநாடு மாவட்டச் செயலாளர் கே.ரஃபீக் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் சி.கே.சசீந்திரன் ஆகியோரும் உடனிருந்தனர்.</p><p>இதை தொடர்ந்து பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வரும் மீனாட்சிப்புழா பகுதியையும் பினராயி விஜயன் பார்வையிட்டார். பின்னர், மேப்பாடி பாலிடெக்னிக்கில் உள்ள நிவாரண முகாமுக்கு சென்று அங்கு தங்கியுள்ள சுமார் ஐம்பது குடும்பங்களை சந்தித்து பேசினார். </p>
