தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்
8 Apr 2026, 5:30 am

தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்

கண்ணூர், ஏப். 7 - “வகுப்புவாத ஒன்றிய அரசை வீழ்த்தவும், தென்னிந்தியாவின் உரிமைகளைக் காக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் பின்னால் மீண்டும் அணிதிரள வேண்டிய காலத்தின் கட்டாயம்,” என்று புகழ் பெற்ற திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

கேரள சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய அவர், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் அரண்கள் தனது உரையில் பிரகாஷ் ராஜ், “நான் இன்று ஒரு பக்கத்தை சார்ந்து நிற்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமது நம்பிக்கையாக பினராயி விஜயன் இங்கே இருக்க வேண்டும் என்று கேரளா தீர்விக்கும் என நம்புகிறேன்.

நமக்கு வெறும் கோஷங்களுக்கு மட்டும் வேலை செய்யும் அரசாங்கம் தேவையில்லை; வகுப்புவாத ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடும் தலைமை நமக்குத் தேவை. அந்த வகையில் தென்னிந்தியாவின் நம்பிக்கையாக பினராயி விஜயன் இருக்கிறார். கேரளா வில் பினராயி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா இவர்களே நம்மைப் போன்றவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை” என்றார்.

பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் ஒன்றிய பாஜக அரசைச் சாடிய அவர், “தேர்தல் என்பது இன்று ஒரு கேள்விக்குறியாகி விட்டது. அவர்களுக்குத் தேர்தல் என்பதே தேவையில்லை. தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, ஊடகங்கள் என அனைத்தும் அவர்களின் உள்ளன. கடந்த தேர்தலில் ‘400 இடங்கள்’ என்று சொன்னவர்கள், வெறும் 240 இடங்களையே பெற்றனர். ஆயினும் 72 இடங்கள் சந்தேகத்திற்குரியவை. ஆந்திராவும் பீகாரும் முட்டுக் கொடுக்காவிட்டால் அவர்கள் ஆட்சியில் இருந்திருக்க மாட்டார்கள்,” என்று சுட்டிக்காட்டினார்.

தொகுதி மறுவரையறை சதி தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவது குறித்து அவர் எச்சரித்தார்: “அடுத்த 5-6 ஆண்டுகளில் அவர்கள் நாடாளுமன்றத்தை மாற்றத் துடிக்கிறார்கள். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டு வந்து மாநிலங்களை உடைக்கப் பார்க்கிறார்கள். குறிப்பாக, ‘தொகுதி மறுவரையறை’ மூலம் மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி-க்களை நியமிக்கத் திட்டமிடுகிறார்கள்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இதனால் பறிக்கப்படும். தென்னிந்தியாவிற்கு நாடாளுமன்றத்தில் குரலே இல்லாமல் செய்ய அவர்கள் பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.

போராட்டக் குணமிக்க கேரளம் “கலாச்சார விவாதம் முதல் நீதித் துறை மற்றும் ஜிஎஸ்டி வரிப் பகிர்வு வரை, தென்னிந்திய முதலமைச்சர்களே ஒன்றிய அரசை எதிர்த்துத் துணிச்சலாக நின்றனர். எதற்கும் பயப்படாத இத்தகைய தலைவர்கள் நமக்கு வேண்டும். என்னை கேரளாவுக்கு ஒரு குடிமகனாக வரவேற்கும் வேளையில் சொல்கிறேன்: உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். மாநிலத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தியுங்கள். அடுத்த ஐந்தாண்டுகள் தென்னிந்தியா போராட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்,” என்று பிரகாஷ் ராஜ் தனது உரையை நிறைவு செய்தார்.