தீக்கதிர் முக்கிய செய்திகள்
27 May 2026, 8:09 pm

ஜான் பிரிட்டாஸ் எம்.பி., சிபிஎம்

தோழர் பினராயி விஜயன் பலமுறை மத்திய அமைப்புகளால் குறிவைக்கப்பட்டுள்ளார். நெருக்கடி நிலையின் போது, அவர் தாக்கப்பட்டார். அவரை கொலை செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அரங்கேறும் இந்த நாடகத்தில் பாஜக மட்டும் தனியாக இல்லை, காங்கிரஸ் கட்சியும் இந்த விளையாட்டின் ஒரு அங்கம் என்பதை நாம் அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும்.

கேரள முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக்

சிபிஎம் பலவீனப்படுத்தப்படாவிட்டால், கேரளாவில் தனக்கு எவ்வித அரசியல் இடமும் இல்லை என்பதை பாஜக நன்கு உணர்ந்துள்ளது. காங்கிரஸின் துணையுடன், இன்று பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பின்னணியில் இந்த அரசியல் தான் உள்ளது.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

மோடி ஆட்சியில், நிர்வாகச் சீர்கேட்டில் இந்தியா இன்றும் முதலிடத்தில் உள்ளது. மணிப்பூர் நிகழ்வுகள் உங்களுக்கு அதை உணர்த்தவில்லை என்றால், இந்தியா போன்ற ஒரு நாட்டைத் தங்களால் (பாஜக) நிர்வகிக்க இயலாது என்பதை நிரூபிக்க, கல்வி அமைச்சகமும் அது தேர்வுகளை நடத்தும் விதமும் போதுமானது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

பாரபட்சமான தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் நடத்திய தேர்தல்கள் முடிந்து பல மாதங்கள் கழித்து, ஒருவழியாக எஸ்ஐஆர் முறையை நியாயப்படுத்தும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது இந்திய நீதித்துறையில் கருப்பு நாள்.