தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்
8 Apr 2026, 5:30 am

தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்

கண்ணூர், ஏப். 7 - "வகுப்புவாத ஒன்றிய அரசை வீழ்த்தவும், தென்னிந்தியாவின் உரிமைகளைக் காக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் போன்ற தலைவர்கள் தலைமையின் கீழ் நாம் அணிதிரண்டு வருவது காலத்தின் கட்டாயம்." என்று புகழ் பெற்ற திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.

கேரள சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய அவர், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவின் அரண்கள் தனது உரையில் பிரகாஷ் ராஜ், "நான் இன்று ஒரு பக்கத்தை சார்ந்து நிற்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமது நம்பிக்கையாக பினராயி விஜயன் இங்கே இருக்க வேண்டும் என்று கேரளா தீர்மானிக்கும் என்று நம்புகிறேன். நமக்கு வெறும் கோஷங்களுக்கு மட்டும் வேலை செய்யும் அரசாங்கம் தேவையில்லை; வகுப்புவாத ஒன்றிய அரசை எதிர்த்துப் போராடும் தலைமை வேண்டும்.

அந்த வகையில் கேரளா தென்னிந்தியாவின் நம்பிக்கையாக பினராயி விஜயன் இருக்கிறார். கேரளா வில் பினராயி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா இவர்களே நம்மைப் போன்றவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை" என்றார்.