நீட் தேர்வை ஒரு கேலிக்கூத்தாக்கி மாணவர்களின் கனவுகளைச் சிதைக்காதீர் பினராயி விஜயன் கடும் கண்டனம்
13 May 2026, 9:23 pm

நீட் தேர்வை ஒரு கேலிக்கூத்தாக்கி மாணவர்களின் கனவுகளைச் சிதைக்காதீர் பினராயி விஜயன் கடும் கண்டனம்

திருவனந்தபுரம், மே 13- நாட்டில் லட்சக்கணக்கான மாண வர்களின் எதிர்காலத்தையும் கனவு களையும் நிர்ணயிக்கும் நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேடுகள் தொடர்பான சர்ச்சையில் சிக்கி யிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள மாநில முதல மைச்சருமான பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தகர்க்கப்படும் மாணவர்களின் நம்பிக்கை இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “பல வருடக் கடின உழைப்பிற்குப் பிறகு தேர்வு களுக்குத் தயாராகி வரும் மாணவர் களின் நம்பிக்கையையும் மன உறுதி யையும் தகர்க்கும் ஒரு சம்பவ மாக இது அமைந்துள்ளது.

நம்பகத்த ன்மையுடன் முறையாகத் தேர்வை நடத்த வேண்டியவர்களே பாது காப்பை உறுதி செய்யத் தவறுவது, நாட்டின் கல்வி முறைக்கே ஒரு பெரும் அவமானமாகும்” என்று சாடியுள்ளார்.

தேர்வுகளை நடத்தும் பொறுப்பை ஒன்றிய அரசு தேசிய தேர்வு முகமை யிடம் (NTA) ஒப்படைத்த பிறகு, வினா த்தாள்கள் கசிவது இது முதல் முறை யல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தேசிய தேர்வு முகமை உடன டியாகக் கலைக்கப்பட வேண்டும் என்றும், தேர்வுகளை நடத்தும் பொறுப்பு முன்பைப் போலவே அந்தந்த அரசு முகமைகளிடம் ஒப்படைக்கப் பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பயிற்சி மைய மாபியாக்களின் ஆதிக்கம் வினாத்தாள் கசிவு மற்றும் இதில் பயிற்சி மைய மாபியாக்களுக்கு உள்ள தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

ஏழ்மை யான குடும்பங்களைச் சேர்ந்த மாண வர்கள் பெரும் பொருளாதாரச் சிரமங் களுக்கு இடையே பல ஆண்டுகள் உழைத்துத் தேர்வை எதிர்கொள்ளும் போது, இத்தகைய முறைகேடுகள் அவர் களுக்கான நியாயமான வாய்ப்பு களைப் பறிப்பதாக அவர் குறிப்பிட்டுள் ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விரி வான மற்றும் வெளிப்படையான விசார ணை உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.

குற்றவாளி யாராக இருந்தா லும் அவருக்கு முன்மாதிரியான தண்ட னை வழங்கப்பட வேண்டும்.

“மாண வர்களின் எதிர்காலம் என்பது ஒரு சோதனைக்கூடம் அல்ல.

நுழைவுத் தேர்வுகளை ஒரு கேலிக்கூத்தாக மாற்று வதன் மூலம் மாணவர்களின் கனவுகள் சிதைக்கப்படக்கூடாது” என்று அவர் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.