தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘சனாதனிகளின் இந்துத்துவா பாதைகள்’ நூலை வெளியிட்டார் பினராயி விஜயன்

21 May 2026, 9:21 pm
‘சனாதனிகளின் இந்துத்துவா பாதைகள்’ நூலை வெளியிட்டார் பினராயி விஜயன்

‘சனாதனிகளின் இந்துத்துவா பாதைகள்’ நூலை வெளியிட்டார் பினராயி விஜயன்

கண்ணூர் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு உறுப் பினர் பி.ஜெயராஜன் எழுதிய ‘சனா தனிகளின் இந்துத்துவா பாதைகள்’ என்ற நூலை சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பினராயி விஜயன் வெளி யிட்டார்.

கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஏகேஜி அரங்கில் நடைபெற்ற இதற்கான விழாவில், சிவகிரி தர்மசங்கம் அறக்கட்ட ளையின் பொதுச் செயலாளர் சுபங்கா னந்த சுவாமி நூலைப் பெற்றுக்கொண் டார்.

நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் கே.கே. ராகேஷ் தலைமை தாங்கி னார். கே.டி. குஞ்ஞிக்கண்ணன் நூலை அறிமுகம் செய்தார். டாக்டர் வினில் பால், எம். பிரகாஷன் பேசினார். பி. ஜெயராஜன் நன்றி கூறினார்.

சிந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் இந்துத்துவவாதிகளால் போ திக்கப்படும் சனாதன தர்மம் என்றால் என்ன என்பதையும், மக்களைப் பிரிக்கும் அத்தகைய கருத்துக்களை ஸ்ரீ நாராயண குரு எவ்வாறு பார்த்தார் என்பதையும் விளக்குகிறது. இந்து சாஸ்திரங்களின் படி சாதியும் தீண்டாமையும் சரியானவை என்று சனாதனிகள் வாதிடுகின்றனர்.

மேலும், மறுமலர்ச்சிக் காலத் தலைவர் கள் அதற்கு எதிராக முன்வைத்த விமர் சனங்களையும் இந்நூல் விவாதிக் கிறது. இந்நூல், கொடுங்கல்லூர் காவு உட்பட கேரளாவின் காவு பாரம்பரியத் தையும் ஆராய்கிறது.

சிந்தா, தேசாபி மானி புத்தகக் கடைகளிலும் அமேசான் இணையதளத்திலும் ரூ.400 விலை யுள்ள இந்நூல் கிடைக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.