இந்தத் தீர்ப்பு ஒரு முடிவல்ல : பினராயி விஜயன்!
7 May 2026, 10:03 pm

இந்தத் தீர்ப்பு ஒரு முடிவல்ல : பினராயி விஜயன்!

திருவனந்தபுரம், மே 7 - கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனது முதல் எதிர்வினையை ஆற்றியுள்ள கேரள முன்னாள் முதலமைச்சரும், சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன், இடது ஜனநாயக முன்னணிக்கு (LDF) இந்தத் தீர்ப்பு ஒரு முடிவல்ல, மாறாக தொடர்ச்சியான அரசியல் செயல்பாட்டிற்கான ஒரு புதிய தொடக்கம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் முன்பை விட வலிமையுடன் திரும்பி வருவோம் என்றும், கேரள மக்களின் நம்பிக்கை யை மீண்டும் பெறுவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதி அளித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக் கொள்கி றோம்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனநாயக முன்ன ணிக்கு (UDF) எங்களது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்பாராத முடிவு இடது ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவு முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகும். அனைத்து வகையான எதிர்மறைப் பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்களையும் மீறி, இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதர வளித்த மக்களுக்கு எங்களது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது தொடர் வெற்றி நழுவிப் போனாலும், பெரும் அளவிலான மக்கள் இடது ஜனநாயக முன்னணியுடன் உறுதி யாக நின்றிருப்பது எங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.

மக்களின் நம்பிக்கையை முன்பை விட வலிமையான முறையில் மீண்டும் பெறுவதற்கும், அதிக ஆற்றலுடன் முன்னேறுவதற்கும் நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களும் நலத்திட்டங் களும் சமூகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்திருப்ப தில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவை நின்றுவிடாமல் தொடர்வதை உறுதிப்படுத்த வலுவான பொது விழிப்புணர்வு தொடர வேண்டும். பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் ‘நவ கேரளம்’ (புதிய கேரளம்) உரு வாக்குவதற்காக இடது ஜனநாயக முன்னணி முன்வைத்த தொலை நோக்குப் பார்வைகளான - அறிவு சார் பொருளாதாரம், இளைஞர் வேலைவாய்ப்பு, சமூக நீதி, பொது சுகாதாரம் மற்றும் கல்வி - ஆகியவை வலுவான எதிர்க்கட்சி என்ற முறை யில் முன்னெடுத்துச் செல்லப்படும். தீவிர வறுமை ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு மற்றும் சமூகப் பாது காப்பு போன்ற துறைகளில் எங்களது கொள்கைகள் மக்களுக்கு அவசிய மானவை.

அவற்றைச் செயல்படுத்த புதிய அரசுக்கு ஜனநாயக ரீதியான அழுத்தத்தை நாங்கள் கொடுப்போம். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எந்தவொரு நல்ல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்.

அதே நேரத்தில், மக்கள் விரோத முடிவுகளை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதே இடது ஜனநாயக முன்னணியின் இலக்காகும்.

மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம் கேரளத்தின் மதச்சார்பின்மை மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பது இடது ஜனநாயக முன்னணியின் அடிப்படை நிலைப்பாடாகும். இந்தத் தேர்தலில் வெளிவந்துள்ள சில சமிக்ஞைகள் மதச்சார்பின்மையைப் பாதுகாக்க விரும்புவோருக்கு கவலையளிக்கின்றன.

பாஜக மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருப்பது ஒரு தீவிரமான விஷயமாகும். எத்தகைய மதவாதத்துடனும் சமரசம் செய்து கொள்ளாமல், பிளவுவாத அரசியலுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இந்தத் தேர்தலின் போது பரவ லான தவறான தகவல்கள் பரப்பப் பட்டன. இதுதொடர்பாக சில ஊட கங்கள் ஆற்றிய பங்கு தீவிரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியது அவ சியம்.

அரைகுறை உண்மைகள், மிகைப்படுத்தல்கள் மற்றும் உண்மை க்குப் புறம்பான பிரச்சாரங் களின் அடிப்படையில் அமையும் செய்திகள் ஜனநாய கத்திற்குப் பலன் தராது.

இருப்பினும், இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவது முக்கியம் என்று இடது ஜனநாயக முன்னணி கருதுகிறது.

முடிவகள் குறித்து ஜனநாயக ரீதியாக ஆய்வு செய்வோம் இடது ஜனநாயக முன்னணி இந்தத் தேர்தல் முடிவை விரிவாக ஆய்வு செய்யவும், அனைத்துத் தோழர்களின் கருத்துக்களைக் கேட்கவும் முடிவு செய்துள்ளது.

ஜன நாயக ரீதியிலான மற்றும் வெளிப்படையான ஆய்வை நடத்து வதே இதன் நோக்கமாகும். முடி வுக்குப் பிறகு பொதுமக்களிட மிருந்தும் கட்சி ஊழியர்களிட மிருந்தும் எழும் கவலைகள், கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும்.

அனை வரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படும். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது இடது ஜனநாயக முன்ன ணிக்காக பல்லாயிரக்கணக்கான ஊழி யர்கள் இரவு பகலாக உழைத்தனர்.

அவர்கள் அனைவருக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். அதிக வலிமையுடன் மக்கள் பணியாற்றுவோம் எதிர்ப்பு சக்திகளான - ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக மற்றும் சில ஊடகங்களின் நிலைப்பாடு - ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சூழலில் இந்த முடிவு வந்துள்ளது.

சில அராஜக மற்றும் அரசியல் சார்பற்ற மையங்களின் தவறான பிரச்சாரங்களால் சில மக்கள் திசைதிருப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மைகளை உணர்த்த தீவிர முயற்சிகள் எடுக்கப்படும்.

மக்களின் தீர்ப்பை மதித்து, அதிக வலிமையுடன் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். கார்ப்பரேட் மக்கள் தொடர்பு நிபுணர்களால் உரு வாக்கப்பட்ட பொய்யான கதை களும் போலிப் பிரச்சாரங்களும் எங்க ளைப் பின்னுக்குத் தள்ளாது.

இடது ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு கள் மற்றும் தலையீடுகளில் உள்ள குறைபாடுகள் ஜனநாயக ரீதியாகப் பரிசீலிக்கப்படும்.

தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மக்களுடனான எங்களது பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், இடது ஜனநாயக முன்னணி அதிக தெளிவுடனும் நம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்லும். கேரளத்தின் எதிர்காலத்திற்காக வும், மக்களின் நலனுக்காகவும், ஜன நாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்காகவும் எங்களது போராட்டம் தொடரும்.

இடது ஜன நாயக முன்னணியுடன் நின்ற அனை வருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் முன்பை விட வலிமையுடன் திரும்புவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.