முந்தய பக்கம்

கேரள முதலமைச்சரும் வாடகை வீடும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பினராயி விஜயன்

12 May 2026, 8:46 pm
கேரள முதலமைச்சரும் வாடகை வீடும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பினராயி விஜயன்
<p><strong>கேரள முதலமைச்சரும் வாடகை வீடும் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் பினராயி விஜயன்</strong></p><p>திருவனந்தபுரம் கேரள சட்டமன்றத் தேர்த லில் ஐக்கிய ஜன நாயக முன்னணி (யுடிஎப்) வெற்றிபெற்றதைத் தொடர்ந்து பினராயி விஜயன் முத லமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்ல மான கிளிப் ஹவுஸில் இருந்து மே 11 இரவு வெளியேறினார். தொடர்ந்து திருவனந்தபுரம் பேக் கரி ஜங்சனில் ரிசர்வ் வங்கி அரு கில் உள்ள வாடகை வீட்டில் அவர் குடியேறினார். தில்லியில் அரசியல் தலை மைக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு திருவனந்தபுரம் திரும்பிய பினராயி விஜயன் குடும்பத்தின ருடன் வாடகை வீட்டுக்கு வந்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், மாநிலக் குழு உறுப்பினர் வி.சிவன்குட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஒரு மாநில முதலமைச்சர் வாடகை வீட்டில் குடியேறும் நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காலத் தில் இப்படி ஒரு முதலமைச்சரா? இடதுசாரிகளின் எளிமை வியக்க வைக்கிறது என சமூகவலைத் தளங்களில் அனைத்து தரப்பின ரும் வரவேற்பு தெரிவித்து வரு கின்றனர். இதனால் பினராயி விஜ யன் டிரெண்டிங்கில் உள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram