தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பினராயி விஜயன் வீட்டில் சோதனை : எம்.ஏ.பேபி கைது அரசியல் பழிவாங்கலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

28 May 2026, 10:06 pm
பினராயி விஜயன் வீட்டில் சோதனை : எம்.ஏ.பேபி கைது அரசியல் பழிவாங்கலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பினராயி விஜயன் வீட்டில் சோதனை : எம்.ஏ.பேபி கைது அரசியல் பழிவாங்கலை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, மே 28- கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் பினராய் விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதைக் கண்டித்தும், இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட தலைவர்களைத் தாக்கி கைது செய்ததைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் செயலாளர் எம்.எஸ் முத்து தலைமை வகித்தார் .

மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே எஸ் அர்ஜுனன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மாவட்டக்குழு உறுப்பினர்கள், மாநகரக்குழு உறுப்பினர்கள் , மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி கோவில்பட்டி நகரம் மற்றும் ஒன்றிய குழுக்கள் சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், நகர குழு உறுப்பினர் தினேஷ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், நகர குழு உறுப்பினர்கள்.

ஒன்றிய குழு உறுப்பி னர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவைகுண்டம் திருவைகுண்டம் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திரு வைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.ராஜா, ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளாத்திகுளம் தாலுகா செயலாளர் கா.ஜோதி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ் கண்டன உரையாற்றினார்.

தாலுகா குழு உறுப்பினர்கள் விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய குழு செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.

கல்யாண சுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் .

கயத்தார் கயத்தார் மெயின் ரோடு, மகாராஜா டீ ஸ்டால் முன்பு, சிபிஎம் கயத்தார் ஒன்றியக்குழு உறுப்பினர் சீனிப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், மும்மலைபட்டி கிளை செயலாளர் செல்வம், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி பாண்டியன்.

பிஎஸ்என்எல் ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி முத்துசாமி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி சரோஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள் திருநெல்வேலி கேரளாவில் முன்னாள் முதல்வர் பினராய் விஜயன் வீட்டிற்குள் அராஜகமாக உள்ளே நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட ஒன்றிய வருமானவரித் துறையினரை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஸ்ரீ ராம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எம்.சுடலைராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆர் கிருஷ்ணன், சிபிஎம் பாளையங்கோட்டை பகுதி குழு செயலாளர் ஆர்.மதுபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் , மாவட்ட குழு உறுப்பினர்கள் ,சிபிஎம் 55வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், தூத்துக்குடி புறநகர் சிபிஎம் தூத்துக்குடி புறநகர் சார்பில் முத்தையாபுரம் பல்க் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிபி எம் புறநகர் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.

மாநில குழு உறுப்பினர் பி.பூமயில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.பேச்சிமுத்து,மற்றும் புறநகர குழு உறுப்பினர்கள் டேனியல் ராஜ், வன்னியராஜா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.