முந்தய பக்கம்

தர்மடத்தில் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு

1 Jun 2026, 9:23 pm
தர்மடத்தில் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு

தர்மடத்தில் பினராயி விஜயனுக்கு உற்சாக வரவேற்பு

சமீபத்தில் நிறைவு பெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் பினராயி விஜயன் தர்மடம் தொகு தியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தர்மடம் தொகுதி யின் மாம்பரத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு நிகழ்வு நடை பெற்றது.

தொகுதிக் குழு சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்வில் கேரள எதிர்க் கட்சித் தலைவரான பினராயி விஜய னுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசியல் எதிரிகளால் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகத் தொடங்கப்பட்ட அவதூறுப் பிரச்சாரங்க ளுக்கு வலுவான பதிலடியாக இந்த வர வேற்பு அமைந்தது.

தேர்தல் தோல்வி யால் இடதுசாரி இயக்கத்தின் மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என்ற திட்ட மிட்ட பிரச்சாரத்தை நிராகரித்து, தர்மடம் தொகுதியில் நடந்த வரவேற்பு மையத்தி ற்கு பல்வேறு தரப்பு மக்கள் திரண்டு வந்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு டி. பிர காஷன் தலைமை தாங்கினார்.

இடது ஜனநாயக முன்னணித் தலைவர்கள் எம்.வி. ஜெயராஜன், கே.கே.ராகேஷ், என்.சந்திரன், பி.சசி, வி.கே.கிரிஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram