முந்தய பக்கம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்!

19 Mar 2026, 7:02 am
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்!
<p><strong>தர்மடம் தொகுதிக்கு எல்.டி.எப் வேட்பாளராக பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!</strong></p> <p>கண்ணூர், மார்ச் 19 - கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன், தர்மடம் சட்டமன்றத் தொகுதியில், இடது ஜனநாயக முன்ன ணியின் (LDF) வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவர் தலசேரி மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமையன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக நடைபெற்ற பேரணியில், முதல்வர் பினராயி விஜயனுடன் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் இ.பி. ஜெயராஜன், மாவட்டச் செயலாளர் கே.கே. ராகேஷ், சபாநாயகர் ஏ.என். சம்ஷீர் மற்றும் கூட்டணி கட்சித் தலை வர்கள் கலந்து கொண்டனர். தேர்தலில் பினராயி விஜ யன் செலுத்த வேண்டிய காப் புத் தொகையை, பத்தனாபுரம் காந்திபவன் அலுவலகப் பொறுப்பாளர்களான டாக்டர் புனலூர் சோமராஜன் மற்றும் கே. வரதராஜன் ஆகியோர் வழங்கினர். இது காந்திபவ னின் அன்னையர்களால் வழங்கப்படும் தொகையா கும். தாங்கள் தயாரித்த கை வினைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை அவர்கள் வழங்கி வருகின்ற னர். கடந்த இரண்டு முறை யும் காந்திபவனின் அன்னை யர்களே பினராயி விஜய னுக்கு காப்புத் தொகையை வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram