தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் சிபிஎம் கேரள சட்டமன்றக் குழு ஒருமனதாக முடிவு

15 May 2026, 8:39 pm
எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் சிபிஎம் கேரள சட்டமன்றக் குழு ஒருமனதாக முடிவு

எதிர்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் சிபிஎம் கேரள சட்டமன்றக் குழு ஒருமனதாக முடிவு

திருவனந்தபுரம், மே 15 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள சட்டமன்றக் குழுத் தலைவராக (எதிர்க்கட்சித் தலைவர்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

மக்கள் பணியில் ஒரு வரலாற்றுச் சாதனை

மத்தியக் குழு உறுப்பினர் கே. ராதாகிரு ஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பினராயி விஜயன், ஏ. விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவுகளை மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் செய்திக் குறிப்பின் வாயிலாக வெளியிட்டார்.

கேரள வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைப்பதற்குக் காரணமாக இருந்தவர் பினராயி விஜயன். அவரது கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் கேரளா வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களில் பல சாதனைகளைப் படைத்தது. குறிப்பாக, கொச்சி-எடமண் நெடுஞ்சாலைத் திட்டம், கெய்ல் எரிவாயு குழாய் திட்டம், தேசிய நெடுஞ்சாலை 66 விரிவாக்கம், விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் பொதுக்கல்வி, பொதுச்சுகாதாரத் துறைகளில் கேரளா கண்ட மகத்தான முன்னேற்றங்கள் அவரது நிர்வாகத் திறமைக்குச் சான்றாகும்.

வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக பினராயி

1998 முதல் 2015 வரை சிபிஎம் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய பினராயி விஜயன், தற்போது ஏழாவது முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளார். தேர்தலில் நிலவிய ‘யுடிஎஃப் அலைக்கு’ மத்தியிலும் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யுடிஎப் அர சின் மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங் களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், அதே வேளையில் மக்களுக்கு விரோதமான முடிவுகளை ஒருபோதும் ஏற்கப்போவ தில்லை என்றும், அவற்றை எதிர்த்துப் போராடுவோம் என்றும் அவர் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல், நிர்வாகம் மற்றும் சட்டமன்ற அனுபவத்தில் பினராயி விஜயன் கொண்டுள்ள நீண்டகாலப் புலமை, 16-ஆவது சட்டமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக அவருக்குப் பெரும் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசாபிமானி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.