தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 May 2026, 9:55 pm

பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை! டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

சென்னை, மே 29 - கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட ஆய்வில் எந்தவித தவறான ஆவணங்களோ, சட்ட விரோத ஆதாரங்களோ கண்டறியப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பினராயி விஜயன் இல்லத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கு பாட்டாளி மக்கள் கட்சி யின் நிறுவன தலைவர் மருத்துவர் ச. ராமதாசு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்பு கள் சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் செயல்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை.

ஆனால், அரசியல் எதிர்ப்பாளர்களை குறிவைத்து அவர்களின் கண்ணியத்தையும் அரசியல் செல்வாக்கை யும் பாதிக்கும் நோக்கில் இத்தகைய சோதனைகள் நடத்தப்படுவது வேதனையளிப்பதாகும் என்று தெரிவித் துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் செயல்பட்டு வரும் பினராயி விஜயன், எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் சார்ந்த ஆட்சித் திறன் கொண்ட தலைவராக மரியாதை பெற்றவர்.

அவ்வாறிருக்கையில், எந்தவித ஆதாரமும் இன்றி நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அரசி யல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே பொதுமக்க ளால் பார்க்கப்படுகிறது என்று ராமதாசு குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு முன்னாள் முதலமைச்சரின் இல்லத்தில் மிகப்பெ ரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் எதுவும் கைப்பற்றப் படாத நிலையில், இந்த நடவடிக்கையின் நோக்கம் உண்மையை கண்டறிவதற்காக அல்ல, மாறாக அர சியல் அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே நடந்ததா? என்ற கேள்வியை எழுப்புகிறது என்று ராமதாசு குறிப்

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி

சென்னை, மே 29 - தமிழ்மொழிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் எப்போதும் முதல் முக்கியத்துவம் அளிப்போம் என்று பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்தார்.

இது வெறும் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல் சட்டப் பூர்வ முறைகள் முழுமையாக பின்பற்றப்படும் என்றும், நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தங்களின் முந்தைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறி னார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு நடு நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைப் பணிகளை நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் உள்ள ஓராசிரியர் பள்ளிகள் தற்போது அடையாளம் காணப்பட்டு வருவதாக தெரி வித்தார்.

சமச்சீரற்ற மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் நீடிக்கும் பள்ளிகளில் சமூக பிரச்சனைகள் காரணமாக இருந்தால் உடனடியாக சரிசெய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், நிதி சார்ந்த பிரச்சனையாக இருந்தால் நிதித்துறையுடன் பேசி தீர்வு காணப்படும் என்றும் கூறி னார்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசிய அமைச்சர், புதிய பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தி லேயே இரண்டு இலவச உதவி எண்கள் அச்சிடப்பட்டு உள்ளதாகவும், போக்சோ சட்டத்தை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.