பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக-வின் பழிவாங்கும் நடவடிக்கை
27 May 2026, 9:27 pm

பினராயி விஜயனுக்கு எதிராக பாஜக-வின் பழிவாங்கும் நடவடிக்கை

சென்னை, மே 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒரு வரும், முன்னாள் முதல்வரும், தற் போதைய கேரள சட்டப் பேரவை யின் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை மற்றும் தில்லியில் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் மீதான காவல் துறை அடக்குமுறைக்கு நாடு முழு வதும் உள்ள தலைவர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டா லின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் கண்ட னம் தெரிவித்துள்ளார். “

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளை வன் மையாகக் கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய முகமைகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவது குறித்த தீவிரமான கவலைகளை, இத்த கைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை எழுப்புகின்றன.

கெடுவாய்ப்பாக, ‘பினராயி விஜயன் ஏன் இன்னும் பாஜக-வின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை?’ என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வந்த சில காங்கிரஸ் தலை வர்கள் முன் வைத்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் உள்ளீடற்ற தன்மையையும் இந்த சோதனைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன” என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாள ருமான அரவிந்த் கெஜ்ரிவால் விடுத் துள்ள கண்டன அறிக்கையில், “கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு எதிராக இ.டி. நடத்திய சோதனை, ஜனநாய கத்தை சீர்குலைக்கவும், பிராந்திய எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும், மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என்பதற்கு மற்றுமொரு வெளிப் படையான சம்பவமாகும். இ.டி.-யின் ‘செயலற்ற நிலை’ என்று காங்கிரஸ் புகார் சொல்லத் தொடங்கிய உடனேயே இ.டி. சோதனை நடத்தியிருப்பது, பாஜக வுக்கும் காங்கிரசுக்குமான உறவைப் பற்றி கேள்விகளை எழுப்புகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் பினராயி விஜயன் இல்லத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையை பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி கட்சித் தலை வருமான தேஜஸ்வியும் கண்டித் துள்ளார்.

“கேரள முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான தோழர் பினராயி விஜயன் வீட்டில் நடத்தப்பட்ட இ.டி. சோதனை அரசி யல் பழிவாங்கும் மற்றும் பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதியாகும்.

நாட்டில் உள்ள புலனாய்வு நிறுவ னங்களை தன் அரசியல் நலன்களுக் காக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்கும் ஆயுதங்களாக மாற்றி வருகிறது பாஜக அரசு. க

டந்த 12 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது போலி வழக்கு போட்டு, சோதனை நடத்தி, கேள்வி கேட்க அழைத்த, எத்தனை பேரை பாஜகவில் சேர்த்தார்கள்? நேர்மைச் சான்றி தழ் வழங்கி எத்தனை பேருக்கு உயர் பதவி வழங்கினார்கள்? பணம் வாங்கிய வீடியோவில் வந்தவர்கள் கூட இன்று முதல்வராக பதவி உயர்வு பெறுகிறார்கள்.

இந்த விஷயத்தில் மோடி அரசு நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்.

இறுதி வெற்றி உண்மைக்கும் நீதிக்கும் தான்.” என்ற தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.