தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாக்குப்போக்கு கூறாமல் மின்தடையிலிருந்து கேரள மக்களை எல்டிஎப் அரசு பாதுகாத்தது எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பேச்சு

yesterday
சாக்குப்போக்கு கூறாமல் மின்தடையிலிருந்து கேரள மக்களை எல்டிஎப் அரசு பாதுகாத்தது  எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பேச்சு

சாக்குப்போக்கு கூறாமல் மின்தடையிலிருந்து கேரள மக்களை எல்டிஎப் அரசு பாதுகாத்தது எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பேச்சு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கேரளசட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் ஆட்சியைக்கைப்பற்றியது. முதலமைச்சராக வி.டி.சதீசன்பொறுப்பேற்றார். கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாகப் பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் ஆட்சி மின்தடை என்ற குற்றச்சாட்டு இல்லாமல் மக்களைப்பாதுகாத்தது. ஆனால், யுடிஎப் ஆட்சியின் முதல் 5 மாதத்திலேயே கேரள மாநிலம் மின்தடையால் இருளில் மூழ்கியுள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் யுடிஎப் ஆட்சியைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், சாக்குப்போக்கு சொல்லாமல் மின்தடையிலிருந்து கேரள மக்களை எல்டிஎப் அரசு பாதுகாத்தது என எதிர்க்கட்சித் தலைவர் பினராயிவிஜயன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மின்தடைப் பிரச்சனை ஏற்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு மக்களை ஒருபோதும் கைவிடவில்லை. மின்சார விநியோகம் குறைவாக இருப்பதாகக் காரணம் கூறி சமாளிப்பு வேலையிலும் ஈடுபடவில்லை. உடனடியாகத் தலையிட்டுமின்தடைப் பிரச்சனையைத் தீர்த்தது.

ஒன்றிய அரசிடமிருந்து மின்சாரம் குறைவாகக் கிடைத்தபோதும், மின் நிலையங்களில்பழுது ஏற்பட்டபோதும் மக்களைப் பாதிக்கவிடாமல் தீர்வுகளைக் கண்டு செயல்பட்டது எல்டிஎப் அரசு. ஆனால், இன்று மின்சாரப் பிரச்சனையைப் பற்றிக் கேட்டால், ‘அற்புதம் செய்யவா முடியும்?’ என காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் அரசு பதிலளிக்கிறது. பிரச்சனைகள் வரத்தான் செய்யும். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதுதான் அரசின் பொறுப்பு. இதுவே எல்டிஎப் அரசுக்கும்,யுடிஎப் அரசுக்கும்உள்ள வித்தியாசம் ஆகும்” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.