தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பின்மையையும் பொதுநலனையும் நிலைநிறுத்துங்கள்! தமிழக முதல்வர் விஜய்க்கு பினராயி விஜயன் வாழ்த்து

10 May 2026, 8:42 pm
மதச்சார்பின்மையையும் பொதுநலனையும் நிலைநிறுத்துங்கள்! தமிழக முதல்வர் விஜய்க்கு பினராயி விஜயன் வாழ்த்து
<p><strong>மதச்சார்பின்மையையும் பொதுநலனையும் நிலைநிறுத்துங்கள்! தமிழக முதல்வர் விஜய்க்கு பினராயி விஜயன் வாழ்த்து</strong></p><p>திருவனந்தபுரம், மே 10- தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ரும் கேரள முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்தார். அவரது வாழ்த்துச் செய்தியில், ஒரு ஜனநாயக அமைப்பில் மக்கள் வழங்கும் தீர்ப்பு ஒரு பெரிய பொறுப்பாகும். தமிழக மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் மக்கள் நலன் ஆகிய விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு அர சாங்கமாக மாறும் என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடும் கேரளமும் நீண்ட காலமாக நட்புறவும் ஒத்துழைப்பும் கொண்டுள்ளன எனவும் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவும் மதசார்பின்மையை பாதுகாக்கவும் இரண்டு மாநில மக்களாலும் ஒன்றுபட்டு செயல்பட முடியும் என நம்புவதாகவும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.