தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கைச் சீர்குலைக்க திரை மறைவில் சூழ்ச்சிகள் கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

15 Jun 2026, 9:27 pm
சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கைச் சீர்குலைக்க திரை மறைவில் சூழ்ச்சிகள்  கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கைச் சீர்குலைக்க திரை மறைவில் சூழ்ச்சிகள் கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

சபரிமலை தங்கக் கொள் ளை வழக்கைச் சீர்குலை க்க திரைமறைவில் சூழ்ச்சி கள் நடைபெறுவதாக எனக்கு சந்தேகம் உள்ளது என கேரள எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”சபரிமலை தங்கத் திருட்டில் ஈடுபட்டிருந்த ஸ்மார்ட் கிரி யேஷன்ஸ் நிறுவனத்தின் வழக்கறி ஞரான கே.பி.பிரதீப்பை தேவஸ் வம் சிறப்பு வழக்கறிஞராக நிய மித்திருப்பது கேள்விக்குரிய நட வடிக்கையாகும். உயர்நீதிமன்றத் தின் மேற்பார்வையில் தற்போது விசாரணை நடைபெற்று வரு கிறது.

அந்தத் தங்கம், ஸ்மார்ட் கிரி யேஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கப் பட்டது. ஆனால் தங்கத்திற்கு பதிலாக செப்புத் தகடுகளில் முலாம் பூசப்பட்டிருந்ததை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்தது. அதன் அடிப்படையில்தான் பங்கஜ் பண்டாரியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஆனா லும், ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவ னத்தின் வழக்கறிஞர் பிரதீப், தங்க ளுக்கு வெறும் செப்புத் தகடுகள் மட்டுமே வழங்கப்பட்டதாக நீதி மன்றத்திலும் வெளியிலும் கூறி யிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத் தும் ஒரு வழக்கறிஞரை, தேவஸம் போர்டின் வழக்கறிஞராக ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) அரசு நியமித்துள்ளது.

இதில் வழக்கமான நடைமுறைகள் பின் பற்றப்பட்டதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. வழக்கமான நடை முறைகளின்படி, அரசு தலைமை வழக்கறிஞர் ஒரு பரிந்துரையைச் செய்து, அதைச் சட்டத் துறைக்கு அனுப்பி, முதலமைச்சரிடம் கொ டுப்பார்.

முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பிறகு, அது அமைச்சரவை க்குச் செல்லும். இங்கு இந்த நடை முறைகள் பின்பற்றப்பட்டதா? இந்த நியமனத்தில் ஏன் இவ்வளவு அவ சரம்? ஏன் இவ்வளவு அவசரமாக இந்த நியமனம் செய்யப்பட்டது? அந்த வழக்கறிஞர் ராஜினாமா செய்ததால் எல்லாம் முடிந்து விட்டது என்று கருத முடியாது.

பிரதீப் என்ன கோப்புகளைப் பெற் றார், தனது குறுகிய பதவிக்காலத் தில் அவர் என்ன செய்தார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த நியமனத்தை முதலமைச் சர் செய்ததாகவும், அதுபற்றி தனக்குத் தெரியாது என்றும் தேவசம் அமைச்சர் கூறியுள்ளார். இதுபோன்ற விஷயங்களில் எந்த அரசியல் ஆலோசனையும் நடத்தப் படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

நியமனம் பெற்ற வழக்கறிஞரின் ராஜினாமாவோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று கருத முடியாது. அவர் தேவசம் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தருணத்திலிருந்து என்னென்ன ஆவணங்கள் அவர் கைக்கு வந்தன என்பது இந்த வழக்கில் மிகவும் முக்கியமானது.

தேவசம் துறை அவர் கையில் உள்ள முக்கி யத் தகவல் வழக்கறிஞரைச் சென்ற டைந்துள்ளதா? இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அந்த வழக்கறிஞர் கையில் ஏதேனும் ஆவணங்கள் இருந்தால், அவை கண்டறியப்பட்டு உரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார்.

குற்றம்சாட்டப்பட்ட நபருடன் பயணம் மேற்கொண்ட கேரள முதலமைச்சர்

முதலமைச்சராவதற்கு முன்பு வி.டி.சதீசன் மங்களூருக்கு மேற் கொண்ட பயணம் குறித்து ஒரு மர்மம் நிலவுகிறது. சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர், அந்தப் பயணத்தில் முதலமைச்சருடன் எப்படிச் சென்றார்? அவர் எப்படி ஒரு இடைத்தர கராக ஆனார்? என்று முதலமைச்சர் தெளிவுபடுத்தவில்லை. முதல மைச்சர் தெளிவுபடுத்தும் வரை இந்த மர்மம் தொடரும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.