“தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்”
7 Apr 2026, 5:38 pm
<p><strong>“தென்னிந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பினராயி விஜயன்”</strong></p>
<p>கண்ணூர், ஏப். 7 - “வகுப்புவாத ஒன்றிய அரசை வீழ்த்தவும், தென்னிந்தியாவின் உரிமைகளைக் காக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் போன்ற துணிச்சலான தலைவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம்,” என்று புகழ் பெற்ற திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார். கேரள சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய அவர், இந்திய ஜன நாயகத்தின் எதிர்காலம் குறித்து ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் அரண்கள் தனது உரையில் பிரகாஷ் ராஜ், “நான் இன்று ஒரு பக்கத்தை சார்ந்து நிற்கிறேன். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நமது நம்பிக்கை யாக பினராயி விஜயன் இங்கே இருக்க வேண்டும் என்று கேரளா சிந்திக்கும் என நம்பு கிறேன். நமக்கு வெறும் கேரளாவுக்கு மட்டும் வேலை செய்யும் அரசாங்கம் தேவையில்லை; வகுப்புவாத ஒன்றிய அரசை எதிர்த்துப் போரா டும் தலைமை நமக்குத் தேவை. கடந்த பத்து ஆண்டுகளாக தென்னிந்தியாவின் நம்பிக்கை யாக பினராயி விஜயன் திகழ்கிறார். கேரளா வில் பினராயி, தமிழ்நாட்டில் ஸ்டாலின், கர்நாட காவில் சித்தராமையா இவர்களே நம்மைப் போன்றவர்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை” என்றார். பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் ஒன்றிய பாஜக அரசைச் சாடிய அவர், “தேர்தல் என்பது இன்று ஒரு கேலிக்கூத்தாகி விட்டது. அவர்களுக்குத் தேர்தல் என்பதே தேவையில்லை. தேர்தல் ஆணையம், அம லாக்கத்துறை, ஊடகங்கள் என அனைத்தும் அவர்களிடம் உள்ளன. கடந்த தேர்தலில் ‘400 இடங்கள்’ என்று சொன்னவர்கள், வெறும் 240 இடங்களையே பெற்றனர். அதிலும் 72 இடங்கள் சந்தேகத்திற்குரியவை. ஆந்திராவும் பீகாரும் முட்டுக் கொடுக்காவிட்டால் அவர் கள் ஆட்சியில் இருந்திருக்க மாட்டார்கள்,” என்று சுட்டிக்காட்டினார். தொகுதி மறுவரையறை சதி தென்னிந்தியாவின் அரசியல் அதிகாரம் பறிக்கப்படுவது குறித்து அவர் எச்சரித்தார்: “அடுத்த 5-6 ஆண்டுகளில் அவர்கள் நாட்டை இந்து ராஷ்டிரமாகவும், இந்தி ராஷ்டிரமாகவும் மாற்றத் துடிக்கிறார்கள். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையைக் கொண்டு வந்து மாநிலங் களை உடைக்கப் பார்க்கிறார்கள். குறிப்பாக, ‘தொகுதி மறுவரையறை’ மூலம் மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி-க்களை நியமிக்கத் திட்டமிடுகிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் இதனால் பறிக்கப்படும். தென்னிந்தியாவுக்கு நாடாளுமன்றத்தில் குரலே இல்லாமல் செய்ய அவர்கள் பார்க் கிறார்கள்” - எனக் குறிப்பிட்டார். போராட்ட குணமிக்க கேரளம் “காசா விவகாரம் முதல் நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி வரிப் பகிர்வு வரை, தென்னிந்திய முதலமைச்சர்களே ஒன்றிய அரசை எதிர்த்துத் துணிச்சலாக நின்றனர். எதற்கும் பயப்படாத இத்தகைய தலைவர்கள் நமக்கு வேண்டும். என் அன்பான கேரளாவுக்கு ஒரு குடிமகனாக நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள். மாநிலத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டின் எதிர்காலத் தைப் பற்றிச் சிந்தியுங்கள். அடுத்த ஐந்தாண்டு கள் தென்னிந்தியா போராட வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் நான் உங்களுடன் இருக்கிறேன்,” என்று பிரகாஷ் ராஜ் தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்வில் எல்.டி.எப் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவரது உரையை வழிமொழிந்தனர்.</p>
<p> </p>
