முந்தய பக்கம்

ஒரே இரவில் பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு

8 Oct 2026, 2:33 am
ஒரே இரவில் பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு
<p><strong>ஒரே இரவில் பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு</strong></p><p>மேட்டுப்பாளையம், அக்.7-நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, செவ்வாயன்று இரவில் பில்லூர் அணையின் நீர்மட்டம்5 அடி உயர்ந்துள்ளது.</p><p>கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சுற்றியுள்ள மலைக்காடுகளில் செவ்வாயன்று இரவு ஆரம்பித்த மழை புதனன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக பெய்தது. இதன் காரணமாக 100 அடி நீர்மட்ட உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் செவ்வாயன்று மாலை வரை 89 அடியாக இருந்த நிலையில், ஒரே இரவில் 5 அடி வரை உயர்ந்து, புதனன்று காலை நீர்மட்டம் 94 அடியாக காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6000 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர்மின் உற்பத்தி பணிக்காக அதன் கீழ் மதகு வழியாக, விநாடிக்கு 6000 கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றின் வேகம் அதிகரித்து பவானிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, நீர்மட்டம் புதனன்று மாலை 96.50 அடியாக உயர்ந்த நிலையில், அணை அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram