தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பில்லூர் அணையில் இருந்து மூன்றாவது நாளாக தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றம்

9 Jul 2026, 11:41 pm
பில்லூர் அணையில் இருந்து மூன்றாவது நாளாக தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றம்
<p><strong>பில்லூர் அணையில் இருந்து மூன்றாவது நாளாக தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றம்</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூலை 9- மேட்டுப்பாளையம் பில் லூர் அணையில் இருந்து மூன்றாவது நாளாக வினா டிக்கு ஆறாயிரம் கன அடி தண்ணீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகி றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அணைக் கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் கிடு கிடுவென உயரத் துவங்கி அணை யின் மொத்த நீர்தேக்க உயரமான 100 அடியில் தற்போது அதன் நீர்மட்டம் 91 அடியை எட்டி யுள்ளது. கடந்த இரண்டாம் தேதி 87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 92 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதன் தற் போதைய நீர்வரத்தான வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே பவானி யாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாயன்று முதல் வியாழனன்று வரை என மூன்றாவது நாளாக அணையில் இருந்து தொடரச்சியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் ஆற் றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி வருகி றது. மேட்டுப்பாளையம் பவானியாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டமும் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.