தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோடையை குளிர்விக்கும் பிச்சாவரம் படகு சவாரி!

22 May 2026, 1:41 am
கோடையை குளிர்விக்கும் பிச்சாவரம் படகு சவாரி!
<p><strong>கோடையை குளிர்விக்கும் பிச்சாவரம் படகு சவாரி!</strong></p><p>கோடை வெயிலை குளிர்விக்கும் இடமாக பிச்சாவரம் சுற்றுலா மைய படகு சவாரி உள்ளதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள் ளனர். சிதம்பரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் சுர புண்ணை காடுகள், சுற்றுலா பயணி களுக்கு சிறந்த இடமாக விளங்கு கிறது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்திக் காடா கும், இங்கு சுமார் 2,800 ஏக்கர் பரப்பளவில் 4,000-க்கும் மேற்பட்ட சிறிய கால்வாய்களுடன் அமைந் துள்ளது. இங்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை சார்பில் உள்ளூர் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து படகு சேவை களை நடத்தி வருகின்றன. இதில் மோட்டார் படகு மற்றும் துடுப்பு படகு ஆகிய இரு வகை உள்ளது. மாங்க்ரூவ் மரங்கள் சூழ்ந்த குறுகிய கால்வாய் கள் வழியாக அடர்ந்த மரங்களுக்கு இடையே படகில் செல்லும் போது, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பறவைகளை காண முடியும். இது சுற்றுலா பயணிகளுக்கு புதுமை யான அனுபவத்தை அளிக்கிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறி ப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூட்டம் அதி கரித்து காணப்படுகிறது. வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் இப் பகுதிக்கு ஆர்வமுடன் வருகை தந்து மாங்குரோவ் காடுகளில் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள். இயற்கை, அமைதி, பறவைகளின் குரல்கள், கடல் காற்று ஆகியவை பயணிகளை வெகுவாக சில்லுனு கவர்கின்றன. பிச்சாவரம் சுற்றுலா மையம், கோடையை குளிர்விக்கும் இடமாக தமிழ்நாட்டின் முக்கிய இயற்கை சுற்றுலா தலங்களில் ஒன்றாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் ரூ 13 கோடி ஒதுக்கீடு செய்து பிச்சாவரத்தை உலக அளவில் மேம்படுத்தும் பணி கள் நடைபெற்று வருகிறது. இந்த பணி கள் 65 சதவீதம் முடிவுற்ற நிலையில் உள்ளது. மீதியுள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணி கள் மற்றும் பொதுமக்கள் புதிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.