தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

5 Dec 2025, 4:21 pm
திருச்சி விரைவு செய்திகள்

தீக்கதிர் புகைப்பட செய்தியாளர் விபத்தில் படுகாயம்

சிவகங்கை, டிச.5-  சிவகங்கை மாவட்ட தீக்கதிர் போட்டோகிராபர் ராஜாராமன். இவர் வியாழனன்று  இருசக்கர வாகனத்தில் சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு சென்றார்.  மான்போர்ட் ஸ்கூல் அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, அய்யம்பாண்டி, உலகநாதன் உள்ளிட்டோர் வேலம்மாள் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து,ஆறுதல் கூறினர்.  தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், தீக்கதிர் பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.  சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ராஜ செல்வன், சிவகங்கை நகர் ன்ற தலைவர் துரைஆனந்த் ஆகியோர் விபத்து குறித்து கேட்டறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வதாக கூறியுள்ளனர்.

தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைத்திட நடவடிக்கை எடுத்திடுக! விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

இராமநாதபுரம், டிச.5- இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் யூரியா உரம் தட்டுப்பாடு நிலவுகிறது. தட்டுப்பாடின்றி உரம் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் உரமிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட முழுவதும் யூரியா உரம் தட்டுப்பாடு உள்ளது. கூட்டுறவு வங்கிகளிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. உரம் உள்ள சில தனியார் கடைகளில் யூரியா உரம் கேட்டால் தேவையில்லாத சில உரங்களை வாங்கினால் தான் யூரியா உரம் கொடுப்போம் என்று கடைக்காரர்கள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவாகிறது. விவசாயிகள் வேதனையடைகின்றனர் . எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாவட்ட முழுவதும் தற்போது தேவையான யூரியா உரம் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை கூட்டுறவு துறையிலும் விற்பனைக்கு கொடுக்கவும் தனியார் கடைகளில் கேட்கின்ற உரம் மட்டும் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இராஜபாளையத்தில் 200 கிலோ புகையிலை: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்  ஒருவர் கைது-இருவர் தப்பியோட்டம்

இராஜபாளையம், டிச.5- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் உட்கோட்ட பகுதியில் ரகசிய தகவலின் பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் அசோக் பாபு,  சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மதுரை சாலையில் உள்ள காவல் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில்,காரை ஓட்டி வந்தவர் தென்காசி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ்(30) மற்றும் உடன் இருந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார்  காரின் பின் பகுதிக்குச் சென்றபோது, எதிர்பாராத விதமாக காரை வேகமாக ஓட்டிக்கொண்டு போய்  சிறிது தூரத்தில் காரை நிறுத்திவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் போலீசார்  காரைக் கைப்பற்றி ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக 240 புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து   வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.   இதேபோல் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் ராஜபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஒருவரை பிடித்து அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா பகுதியை சேர்ந்த முத்துக்கழுவன் மகன் ஜெயன்(64) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வீடு கட்ட கடன் வழங்குவதில் நிதி முறைகேடு: முன்னாள் வட்டாட்சியர் உட்பட  5 பேருக்கு  சிறை தண்டனை  சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை, டிச.5- இலங்கை  தமிழர்களுக்காக காரைக் குடி அருகே பாதரக்குடியில் வீடுகள் கட்ட கடன் வழங்குவதற்காக, கடந்த 1994 பிப்ரவரி மாதத்திலிருந்து 1996 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் ரூ.43.50 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கியது. இந்தத் தொகையை 435 இலங்கை தமிழர்களுக்கு வழங்கியது போல் போலி ஆவணங்களை தயாரித்து, வேறு நபர்க ளின் பெயரில் பணத்தை எடுத்து முறைகேடு   செய்யப்பட்டது.  இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அப்போதைய தேவ கோட்டை கோட்டாட்சியர் சையது உசேன், காரைக் குடி வட்டாட்சியர் சர்தார், துணை வட்டாட்சி யர் இப்ராஹிம், கழனிவாசல் கிராமம்  நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், சிவ கங்கை ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரிந்த உதவியாளர் தனசேகரன், ஒப்பந்த தாரர் கதிரேசன், இலங்கை தமிழர் மறு வாழ்வு  மையத் தலைவராக இருந்த முத்து  என்ற சரவணமுத்து மற்றும் மதுரை பாண்டி யன் நகரைச் சேர்ந்த தினேஷ்குமார், திருமங்கலம் மேலகோட்டையைச் சேர்ந்த ராமர் ஆகிய 9 பேர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்றது.  வழக்கு விசாரணையின் போதே சையது உசேன், இப்ராஹிம், ராமச்சந்தி ரன், தனசேகரன் ஆகியோர் உயிரி ழந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா கிறிஸ்டி, குற்றம் சாட்டப்பட்ட சர்தார், கதிரேசன், முத்து என்ற சரவண முத்து ஆகிய 3 பேருக்கு தலா 3 ஆண்டு கள் கடுங்காவல்  தண்டனையும், தினேஷ்குமார், ராமர் ஆகிய 2 பேருக்கும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  இத் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஏ.ஆர்.மோகன் கூறுகையில், சிவ கங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடியில் இலங்கை தமிழ் மக்க ளுக்காக வீடுகள் கட்டுவதற்கு ஒதுக்கப் பட்ட நிதியில்  முறைகேடு நடைபெற்றது. இந்த முறை கேட்டை  கண்டித்து, நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்து உறுதிமிக்க போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி யது. இதன்பிறகுதான்  லஞ்ச ஒழிப்புத்துறை  விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.  பாதரக்குடியில் நடைபெற்றதை போன்றே சேலம், கடலூர் ,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும்   நிதி முறை கேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டது. இப்போது நீதிமன்றம் தண்டனை வழங்கி அளித்துள்ள தீர்ப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நடத்திய போராட் டத்துக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.