தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருந்துகளைச் சரியான வெப்பநிலையில் பாதுகாக்க குளிர்பதன வசதி தேவை அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தல்

11 Jul 2026, 10:30 pm
மருந்துகளைச் சரியான வெப்பநிலையில்  பாதுகாக்க குளிர்பதன வசதி தேவை அனைத்து மருந்தாளுநர் சங்கம்  வலியுறுத்தல்
<p><strong>மருந்துகளைச் சரியான வெப்பநிலையில் பாதுகாக்க குளிர்பதன வசதி தேவை அனைத்து மருந்தாளுநர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 11- திருவண்ணாமலை வட்டாட்சியர் அலு வலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் வே. விஜயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உ. சண்முகம், மாநிலப் பொருளாளர் க. இளங்கோ மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் எஸ். வெங்கடேசன் வரவேற்புரை ஆற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம். பரிதிமால் கலைஞன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இக்கூட்டத்தில், பொதுமக்கள் நலன் கருதி மிக முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. குறிப்பாக, அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து களைச் சரியான வெப்பநிலையில் பாது காத்திட, குளிர்பதன வசதியுடன் கூடிய போதிய இடவசதி கொண்ட மருந்து கிடங்கு களை அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது. மேலும், காலியாக உள்ள 1260-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணி யிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருந்தாளுநர்களை மாற்றுப் பணியில் அமர்த்துவதைத் தவிர்த்து, காலியாக உள்ள இடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றும் கோரப்பட்டது. இவற்றுடன், அரசு ஏற்கனவே பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி மருந்தாளுநர்களுக்குக் கூடுதலாக மூன்று கட்ட பதவி உயர்வு பணியிடங்களை உரு வாக்க வேண்டும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளைக் கைவிட்டு, காலமுறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சுகா தாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் அனுப்பும் இயக்கத்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செப்டம்பர் மாதத்தில் மாவட்டப் பொதுக்குழு மற்றும் உலக மருந்தாளுநர் தினத்தை நடத்துவது எனவும், அக்டோபர் 15-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் மாநிலச் செயலாளர் நா. பார்த்தசாரதி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.