பணிப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடுக மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் வலியுறுத்தல்
2 Feb 2026, 4:51 pm
<p><strong>பணிப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திடுக மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப்.2- மருந்து விற்பனை பிர திநிதிகளின் பணிப் பாது காப்பை உத்தரவாதப் படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் ஆண்டு பேரவைக்கூட்டம், சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சுகதேவ் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் ஓ.எஸ்.திலீப் மேனன் சங்கக்தின் கொடியை ஏற்றி வைத்து, துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஆர்.செல்வம், பொருளாளர் எஸ்.கதிரவன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநிலச் செயலாளர் கு.வினோத் ராமானுஜம் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். விற்பனை அபிவிருத்தி பணியாளர் சட்டம் 1976, எஸ்பிஇ சட்டம் ரத்து செய்யக்கூடாது. நிலையான வேலை விதிமுறைகள் வகுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் உரிமையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தனிநபர் தரவு உரிமையை பாதுகாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். அனைத்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். உற்பத்தி செலவுக்கு ஏற்ப மருந்துகளின் எம்ஆர்பி விலையை நிர்ணயிக்க வேண்டும். மருந்து நிறுவனங்கள் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு ஆன்லைன் மீட்டிங் நடத்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக ஜி.சுகதேவ், செயலாளராக ஆர்.செல்வம், பொருளாளராக எஸ்.கதிரவன், இணைச்செயலாளராக டி.நாகராஜன் உட்பட 13 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.</p>
