முதுமையில் நாய் பூனைகளை வளர்த்தால் மூளை சுறுசுறுப்படைகிறது
13 Jun 2026, 7:49 pm

முதுமையில் நாய் பூனைகளை வளர்த்தால் மூளை சுறுசுறுப்படைகிறது

உலக மக்கள்தொகை அதிக ரிக்கிறது. டிமென்சியா குறைபாட்டினால் பாதிக்கப்படுவோ ரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் முதுமையில் அறிவாற்றல் குறைவ தைத் தடுக்கும் போராட்டத்தில் விஞ்ஞா னிகள் எதிர்பாராத ஒரு துணையைக் கண்டுபிடித்துள்ளனர். நம் பொறுமை யை விட பூனைகளும் நாய்களும் அதிக மாக உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றன. அதே நேரத்தில் அவை நம் மூளையை கடிகார முட்கள் போல சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கின்றன.

நான்கு கால் நண்பன்

வருமுன் காப்பது என்ற கோட் பாட்டின் அடிப்படையில் ஆரோக்கியத் தை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கியத் திருப்பமாக இந்த கண்டுபிடிப்பு அமை யும்என்று நம்பப்படுகிறது. நாய் பூனை போன்ற ஒரு நான்கு கால் நண்பனை சொந்தமாகக் கொண்டிருந்தால் அவற் றின் தோழமை வயதாகும்போது நம் அறிவாற்றலை குறையாமல் பாதுகாக் கும் சில குறிப்பிட்ட மூளைச் செயல் பாடுகளுடன் தொடர்புகொண்டுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. இந்தத் தொடர்பு நாம் வளர்க்கும் விலங்கைப் பொறுத்து வேறுபடுகிறது. நாய் உரிமையாளர்கள் உடனடி மற்றும் தாமதமான நினைவாற்றல் குறைவு என்ற இரு நிலைகளில் கூர்மை யான ஞாபகசத்தியுடன் உள்ளனர். பூனை வளர்ப்பவர்களுக்கு சரளமாகப் பேசும் ஆற்றல் குறைவதில்லை. உரிமையாளர்களிடம் அறிவாற்றல் குறைவு ஏற்படும்போது எல்லா செல்லப் பிராணிகளும் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் ஒரே மாதிரியாக படைக்கப்படவில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. மீன் மற்றும் பறவை போன்ற மனித னுக்கு மகிழ்ச்சி தரும் செல்லப் பிராணி கள் நாய் பூனை போல இதில் உதவு வதில்லை என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர். “நினைவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் குறைவில் செல்லப் பிராணிகளை வைத்திருப்ப வர்கள் வயதாகும்போது நேர்மறை யான நன்மைகளைப் பெறுகின்றனர். ஆனால் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த செல்லப் பிராணிகளால் ஏற்படும் நன்மைகள் ஏன் வேறுபடுகி ன்றன என்பது பற்றி விரிவாகத் தெரிய வில்லை” என்று ஜெனீவா பல்கலைக் கழகத்தில் வாழ்நாள் வளர்ச்சிக்கான உளவியல் ஆய்வுக் குழு (lifespan developmental psychology research group) என்ற அமைப்பின் விஞ்ஞா னியும் ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான அட்ரியானோ ராஸ்ட்டி கோவா (Adriana Rostekova) கூறுகி றார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை அறி வியல் அறிக்கைகள் Scientific Repo rts) என்ற இதழில் வெளிவந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக ஐம்பது மற்றும் அதற்கும் கூடுதலான வயதான வர்களிடம் செல்லப் பிராணிகளை சொந் தமாக வளர்ப்பவர்களுக்கும் அறிவாற் றல் குறைவிற்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி ஆரோக்கியம் மற்றும் ஓய்வுநிலை பற்றிய ஐரோப்பாவின் எய்ட் வேவ்ஸ் ஆய்வு (eight waves of the Survey of Health and Retire ment in Europe) என்ற அமைப்பின் தரவுகளைப் பயன்படுத்தி ஆராயப் பட்டது. நாய்கள், பூனைகள், மீன்கள் மற்றும் பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களிடம் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. “வெவ்வேறு வகை பிராணிகளிடம் வேறுபாடுகள் காணப் பட்டது ஆய்வின் புதுமை. அறிவாற்றல் குறைவதில் மீன் மற்றும் பறவை உரிமையாளர்களின் செயல்பாட்டில் அர்த்தமுள்ள வேறுபாடுகள் காணப்பட வில்லை. பொதுவாக மற்ற பிராணி களை வளர்ப்பதைவிட முதன்மையாக நாய் அல்லது பூனையை வளர்ப்பதே பெருவாரியான பாணியாகக் காணப் பட்டது.

செல்லப் பிராணியாக மற்ற உயிரினங்கள்

மீன் மற்றும் பறவை உரிமையா ளர்களிடம் இந்த தொடர்புகள் இல்லா மல் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மீன் மற்றும் பறவையின் குறைந்த ஆயுட்காலம் உரிமையாளர் களுடன் அவற்றிற்கு இருக்கும் உணவுப்பூர்வமான தொடர்புகளை குறைக்கிறது. வரையறை செய்கிறது. செல்லப் பிராணி மீன் அல்லது பற வைக்கும் ஒரு நாய் அல்லது பூனைக் கும் இடையில் தொடர்புகளில் ஏராள மான வேறுபாடுகள் உள்ளன. பறவை ஏற்படுத்தும் அதிக அளவிலான சத்தத் தால் அதன் உரிமையாளரின் உறக்கம் எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. இதனால் உரிமையாளரின் அறி வாற்றல் குறைகிறது. நாய் அல்லது பூனைக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஏற்படும் தொடர்பு தனித்து வமானது. அறிவாற்றலைத் தூண்டக் கூடியது. இது மற்ற பிராணிகளிடம் குறைவாக உள்ளது” என்று அட்ரியா னோ ராஸ்ட்டிகோவா கூறுகிறார். நாயு டன் பழகும்போது இத்தொடர்புகள் பெருமூளை செயல்பாடுகளைத் தூண்டுகிறது. வலுவான கவன ஈர்ப் பை ஏற்படுத்துகிறது. உணர்வுகள் தூண் டப்படுகின்றன. பிராணிகளின் சுபாவத் தை கணிப்பது கடினம். என்றாலும் பூனையுடன் பழகும் போது உரிமையாளரின் பெருமூளைப் புறணி (prefrontal cortex) மற்றும் மடிப்புகள் உள்ள கீழ் முன் வளைவு (inferior frontal gyrus) ஆகிய பகுதி களில் செயல்பாடுகள் அதிகரிப்பதாக மற்ற ஆய்வுகள் கூறுகின்றன. “அறி வாற்றல் மெதுவாகக் குறைவதால் நாய் அல்லது பூனையை வளர்ப்பவர் களின் சமூகத் தொடர்புகள் அதிகரிக் கின்றன. ஒரு சமூக ஊடகத்திற்கு மாற் றாக இது உள்ளது” என்று அட்ரியா னோ ராஸ்டிகோவா கூறுகிறார். உலகம் முழுவதும் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலை யில் இந்த ஆய்வு ஆரோக்கியமான முதுமையடைதல் பற்றிய நம் எண்ணங் களை மறு வடிவமைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். “ஆரோக் கியம் என்றால் நோய்கள், மருத்துவ மனைகள் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கி றோம். ஆனால் நீண்ட காலம் வாழும் போது, நோய் தற்காப்புடன் நீண்ட காலம் வாழ்வதை நோக்கமாகக் கொள் ளும்போது மருத்துவர்கள், மருத்துவ மனைகளுக்கும் அப்பால் நம் ஆரோக் கியச் செயல்பாடுகள் அமைகின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். எவ்வாறு வாழ்கிறோம் என்பதைப்பொறுத்ததே நம் வாழ்வு. வாழ்வை மகிழ்ச்சியுடன் பொருள் பொதிந்ததாக வாழ்வதை கூறுவதே இந்த ஆய்வின் அற்புதச் செய்தி. ஆரோக்கியமாக வாழ்வது, ஏதே னும் ஒரு செயலில் எப்போதும் சுறுசுறுப் பாக நம்மை வைத்துக்கொள்வது, எப் போதும் மகிழ்வுடன் இருப்பது, தொடர் புகளுடன் இருப்பது முக்கியம். இதற்கு ஒரு செல்லப் பிராணி நமக்கு நிச்சயம் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ் வே நமக்கு அது தரும் ஊக்கத்தொகை” என்று நீண்ட ஆயுளுடன் வாழ்வது அவசிய (Longevity Imperative) என்ற நூலின் ஆசிரியரும் செல்லப்பிராணி யாக ஒரு பூனையை வளர்ப்பவருமான ஆண்ட்ரூ ஸ்காட் (Andrew Scott) கூறுகிறார். முதுமையடைந்துவரும் மனித குலத்திற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நாம் கருதலாம்.