தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸிடமிருந்து பணம் பெற்ற பெட்ரோலிய அமைச்சரின் மகள்! நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

12 Mar 2026, 4:20 pm
தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸிடமிருந்து பணம் பெற்ற பெட்ரோலிய அமைச்சரின் மகள்! நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
<p><strong>தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸிடமிருந்து பணம் பெற்ற பெட்ரோலிய அமைச்சரின் மகள்! நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு</strong></p> <p>புதுதில்லி, மார்ச் 12 - நாடாளுமன்ற மக்களவை வியாழனன்று காலை மீண்டும் கூடி யது. மேற்கு ஆசியப் போர் தொடர்பாகவும், சிலிண்டர் உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி &lsquo;இந்தியா&rsquo; கூட்டணி எம்.பி.,க்கள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவரின் மைக் அணைக்கப்பட்டது குறித்தும் அவர்கள் பிரச்சனையைக் கிளப்பினர். ஆனால், மக்களவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால், எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுத்து, ஒன்றிய அமைச்சர்களைப் பேசுமாறு அழைத்தார். இதையடுத்து ஏற்பட்ட கடும் அமளியால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. &nbsp;ஓம் பிர்லா மழுப்பல் 12 மணிக்கு அவை மீண்டும் &nbsp;கூடியதும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த ஓம் பிர்லா, &ldquo;எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக்குகளை (மைக்ரோபோன்) நான் அணைக்க வில்லை. உறுப்பினர்களின் மைக்கு களை ஆன்செய்யவோ அல்லது ஆப் செய்யவோ எந்த பட்டனும் சபாநாயகர் இருக்கையில் இல்லை. எந்தவொரு உறுப்பினரையும் இடைநீக்கம் செய்வது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. ஆனால், நாடாளுமன்ற விதிகளை மீறும்போது, அவையின் கண்ணி யத்தைப் பாதுகாக்க இத்தகைய கடின மான முடிவுகளை எடுக்க வேண்டி யுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பதாகைகளை ஏந்தி ஆளுங் கட்சி இருக்கைகளை நோக்கிச் சென்றது அவையின் கண்ணி யத்திற்கு எதிரானது. அதைத் தடுக்கவே தான் நடவடிக்கை எடுத் தேன்&rdquo; என மழுப்பலாக விளக்கம் அளித்தார். ஓம் பிர்லா பேசிய சில &nbsp;நிமிடங்களில் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. சிபிஎம் எம்.பி.க்கு &nbsp;அனுமதி மறுப்பு பின்னர் 2 மணிக்கு அவை கூடியது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் உறுப்பினர் அம்ரா ராம், &nbsp;எரிவாயு விலை குறித்த விவ காரத்தை எழுப்ப முயன்றார். ஆனால் துணை மானியக் கோரிக்கைகள் குறித்து மட்டுமே பேசுமாறு, அப்போது அவையை வழிநடத்திய ஜகதாம்பிகா பால் அறிவுறுத்தினார். அம்ரா ராமை பேச விடுங்கள் என காங்கிரஸ் எம்.பி., முகமது ஜாவேத் குறுக்கீடு செய்ய முயன்றார். ஆனால் அவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு தொடர்ந்து வியாழனன்று மாலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, &ldquo;ஒரு நாட்டின் அடிப்படை அஸ்திவாரமே அதன் எரிசக்தி பாதுகாப்புதான். நாம் யாரி டம் எண்ணெய் வாங்க வேண்டும், &nbsp;ரஷ்யாவிடம் வாங்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அமெரிக்கா விடம் நாம் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? இது இந்தியாவின் இறையாண்மையை அடமானம் வைப்பது போன்றது. &nbsp;இந்தியா போன்ற ஒரு பெரிய நாடு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு மற்றொரு நாட்டின் ஜனாதிபதியிடம் அனுமதி பெறுவது மிகவும் புதிராக உள்ளது. &nbsp;நமது உறவுகளை நாமே தீர்மானிக்க முடியாமல் போனது ஏன்? இந்த புதி ருக்கு விடை &lsquo;சமரசம்&rsquo; என்பதாகும். &nbsp;இங்கே அமர்ந்திருக்கும் ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் (ஹர்தீப் சிங் பூரி), அவரே தானாக முன்வந்து தான் எப்ஸ்டீன் என்பவருக்கு நண்பர் என்று கூறியுள்ளார். ஹர்தீப் சிங் பூரியின் மகள், தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸிடமிருந்து பணம் பெற்றதற்கான ஆவணங்கள் தன்னி டம் உள்ளன&rdquo; என்று பரபரப்பைக் கிளப்பினார். இது அவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;முன்னதாக, பாஜக எம்.பி., நிஷிகாந்த் தூபே போன்றவர்கள், ராகுல் காந்தியின் &lsquo;பாரத் ஜோடோ யாத்திரை&rsquo;க்கு சொரோஸ் நிதி அளித்ததாகப் பதில் குற்றம் சாட்டியது &nbsp;குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.