தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘பெட்ரோல் நிலைய’ பணத்தை பறிமுதல் செய்வது கூடாது! பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு கடிதம்

19 Mar 2026, 3:18 pm
‘பெட்ரோல் நிலைய’ பணத்தை பறிமுதல் செய்வது கூடாது! பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு கடிதம்
<p><strong>&lsquo;பெட்ரோல் நிலைய&rsquo; பணத்தை பறிமுதல் செய்வது கூடாது! பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு கடிதம்</strong></p> <p>சென்னை, மார்ச் 19 - தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு தின சரி செலுத்தும் பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழ்நாடு பெட்ரோலிய டீலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலம் முழுவதும் ஐஒசிஎல், பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய நிறுவனங்களின் கீழ் 7,100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் இயங்குகின்றன. இந்நிலையங்களில் தினசரி விற்பனையில் சுமார் 75 சதவிகித பண பரிவர்த்தனைகளாக நடைபெறுவதால், ஒவ்வொரு நிலை யத்திலிருந்தும் ரூ. 22 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை தினசரி வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டியுள்ளது. &nbsp;அவ்வாறிருக்கையில், ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்வோரிடம் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்வதால் இடையூறு ஏற்படுவதாக கூறும் டீலர்கள் சங்கம், வங்கிக் கடிதம், விற்பனை பதிவு, அங்கீகாரக் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து முறையான வணிகப் பணத்தை பறிமுதல் செய்யாமல் அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.